திடீர் நெஞ்சுவலி.. கைதான சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மருத்துவமனையில் அனுமதி
சேலம்: முறைகேடு புகாரில் நேற்று கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன். இவர், பல்கலைக்கழகத்தில் விதிகளை மீறி நிறுவனம் தொடங்கி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

அதாவது பூட்டர் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவோரை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து பல விஷயங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் போலீஸார் நேற்று கைது செய்தனர். அதன்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதையடுத்து 7 நாட்கள் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் இன்று அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதாவது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் கைது.. 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு!
இதுதொடர்பாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகராக இருந்த இளங்கோவன் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது துணைவேந்தர் ஜெகநாதன் விதிகளை மீறி பூட்டர் பவுண்டேஷன் தொடங்கி அரசு நிதியை தவறாக பயன்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் போலீசார்ர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அதன்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்படி 7 நாட்கள் சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். காவல்துறை அனுமதியின்றி வெளியூர் செல்லக்கூடாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
இதையடுத்து முறைகேடு புகார் தொடர்பாக போலீசார் இன்று ஜெகநாதன் வீடு, அலுவலகம் உள்பட 7 இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின்போது சில முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் ஜாமீனில் இருக்கும் ஜெகநாதனுக்கு இன்று திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதாவது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெகநாதன் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்க டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications