16 வயசு தான்! நள்ளிரவில் குழந்தைக்கு தாயான சிறுமி! பதறிப் போன பெற்றோர்! ’சைக்கோ’வை தேடும் போலீஸ்!
சேலம் : சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவி நேற்று இரவு குழந்தை பெற்றெடுத்த நிலையில் சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த அவரது சகோதரியின் கணவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் அதே வேளையில் உறவினர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் சிறுமிகள் குழந்தை பெற்றெடுத்து வரும் சம்பவங்கள் பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
இது குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில் சேலம் மாவட்டத்தில் மகளாக கருத வேண்டிய மனைவியின் 16 வயது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்ததோடு குழந்தை பெற்றெடுக்கவும் காரணமாக இருந்த கொடூரனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேலத்தில் ஷாக்
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கொங்கணாபுரம் அருகே குட்டசிவளவு பகுதியில் தனது சகோதரியின் வீட்டில் தங்கி படித்து வந்தார். அவரது சகோதரி அப்பகுதியில் உள்ள பஞ்சாலையில் வேலைக்குச் சென்று வரும் நிலையில் சிறுமி மட்டும் வீட்டில் தனியே இருப்பது வழக்கம். இந்த நிலையில் சிறுமியின் சகோதரியின் கணவரான 26 வயதான அழகேசன் சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் அவரை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

பாலியல் தொல்லை
மேலும் இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார் மாமாவின் பாலியல் தொந்தரவு நீடித்து ஒரு கட்டத்தில் சிறுமி கர்ப்பமாகி இருக்கிறார். இதனால் பயந்து போன சிறுமி இது குறித்து அழகேசன் கூறிய போது நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனவே இதுகுறித்து யாகமும் சொல்ல வேண்டாம் குழந்தை பிறந்த பிறகு இதைப்பற்றி மற்றவரிடம் பேசலாம் என கூறியுள்ளார் இதனால் சிறுமியும் அமைதியாக இருந்துள்ளார்.

நள்ளிரவில் குழந்தை
இந்த நிலையில் கடந்த வாரம் பள்ளியில் சிறுமி சோர்வாக இருந்ததைக் கண்ட பள்ளி ஆசிரியர்கள் இதுகுறித்து சிறுமியின் சகோதரி மற்றும் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர் இதை அடுத்து சிறுமையை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது சிறுமி ஒன்பது மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளனர் இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் 11 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது.

போலீசார் விசாரணை
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் அழகேசன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் வழக்கு பதிவு செய்த தகவல் அறிந்ததும் அழகேசன் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர் 16 வயதில் சிறுமி குழந்தை பெற்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications