சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நைட்டியுடன் மஞ்சுளா.. கோயிலுக்குள் வந்த திமுக பெண் கவுன்சிலர்.. பதறிய அர்ச்சகர்.. மாலையே பணிநீக்கம்!

Google Oneindia Tamil News

சேலம்: திமுகவை சேர்ந்த சேலம் பெண் கவுன்சிலர் கொடுத்த நெருக்கடியால் சேலம் சீதா ராமச்சந்திர மூர்த்தி கோயிலின் அர்ச்சகர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

    சேலம்: அர்ச்சகரை ஒருமையில் பேசும் கவுன்சிலர்...வீடியோ வெளியானதால் பரபரப்பு!

    இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகரில் சீதா ராமசந்திர மூர்த்தி கோயில். இந்த கோயில் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும் மாலை 5 முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    இந்த கோயிலின் அர்ச்சகராக பணிபுரிந்து வருபவர் கண்ணன் (32). அவர் கடந்த 27ஆம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் உருக்கமான தகவல்களை தெரிவித்திருந்தார்.

     ஊரு விட்டு ஊரு வந்த கவர்னர வம்பிழுக்காதீங்க.. சட்டை கிழிஞ்சி போச்சுதுன்னா.. திமுகவை சீண்டும் பாஜக! ஊரு விட்டு ஊரு வந்த கவர்னர வம்பிழுக்காதீங்க.. சட்டை கிழிஞ்சி போச்சுதுன்னா.. திமுகவை சீண்டும் பாஜக!

     23 ஆண்டுகள்

    23 ஆண்டுகள்

    அவர் கூறுகையில், இந்த கோயிலில் நான் 23 ஆண்டுகளாக அர்ச்சகராக சேவையாற்றி வருகிறேன். திமுகவை சேர்ந்த மாநகராட்சி 40ஆவது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா கோயில் பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்து வருகிறார். மேலும் அடியாட்களை கொண்டும் மிரட்டுகிறார்.

     ஆபத்து

    ஆபத்து

    எனக்கோ எனது குடும்பத்தினருக்கோ ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழு காரணம் திமுக கவுன்சிலர் மஞ்சுளாதான். இதுகுறித்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கண்ணனை மஞ்சுளா ஒருமையில் பேசும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

    வீடியோ

    வீடியோ

    அந்த வீடியோவில் கண்ணனை மஞ்சுளா ஒருமையில் பேசுகிறார். அங்கிருந்த மக்கள் அர்ச்சகருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்கிறார்கள். எனினும் அதை கண்டு கொள்ளாமல் அவர் ஒருமையிலேயே பேசி வருகிறார். இது தொடர்பாக மஞ்சுளா கூறுகையில் பெண் பக்தர்களிடம் அர்ச்சகர் தவறாக நடந்து கொள்வதாக புகார்கள் எழுந்தன.

    அர்ச்சகரை கண்டித்தேன்

    அர்ச்சகரை கண்டித்தேன்

    அதற்காக அர்ச்சகரை கண்டித்தேன். ஆனால் அவர் என் மீது பொய் கூறுகிறார் என தெரிவித்துள்ளார். இருவருமே மாறி மாறி புகாரை கூறியுள்ளார்கள். மேலும் கோயில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதை பார்வையிட மஞ்சுளா நைட்டியுடன் சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்ததும் அர்ச்சகர் அதிர்ச்சி அடைந்து கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    நீக்கப்பட்ட அர்ச்சகர்

    நீக்கப்பட்ட அர்ச்சகர்

    இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்த தினத்தன்று மாலையே அர்ச்சகர் கண்ணன் கோயிலிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு புது அர்ச்சகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அர்ச்சகர் கண்ணன் கூறுகையில் கவுன்சிலரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளை மட்டும் செயல் அலுவலர் எடுத்து கொண்டு என் மீது நடவடிக்கை எடுத்துவிட்டார். எந்த விசாரணையும் இன்றி நான் கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என கண்ணன் தெரிவித்தார்.

    English summary
    Priest Kannan sacked from his duty in Salem after he had war with DMK Councilor.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X