சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேலத்தில் ரவுடி கடத்தல் சம்பவம்.. மாணவி, விஏஓ உள்பட 5 பெண்களுடன் தினம் உல்லாசம்.. விசாரணையில் பகீர்

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் நகைக் கடை உரிமையாளரின் நிலத்தை மோசடி செய்த பிரபல ரவுடி விஏஓ, மருத்துவ மாணவி உள்பட 6 பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருவது தெரியவந்து.

சேலம் கோரிமேடு அருகே உள்ள பிருந்தாவன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (36). இவர் பிரபல ரவுடி. ராஜாராம் நகரைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இருவரும் நண்பர்கள்.

இவர்கள் இருவரையும் காரில் மர்ம கும்பல் கடத்திச் சென்றது. சேலம் ஐந்து ரோடு பகுதியில் பிரவீன்குமார் காரில் இருந்து தப்பினார், புகாரின் பேரில் அழகாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மிஸ்ஸான ஸ்கெட்ச்.. போதையில் எதிரிக்கு பதில் நண்பனையே குத்திய ரவுடி! அடுத்து நடந்த அதிர்ச்சி ட்விஸ்ட்மிஸ்ஸான ஸ்கெட்ச்.. போதையில் எதிரிக்கு பதில் நண்பனையே குத்திய ரவுடி! அடுத்து நடந்த அதிர்ச்சி ட்விஸ்ட்

கடத்தல் கும்பல்

கடத்தல் கும்பல்

கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க காவல் துறை ஆணையர் மாடசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் பூபதியை விட்டுவிட்டு கடத்தல் கும்பல் தப்பிவிட்டது. இதையடுத்து பூபதியை போலீஸார் மீட்டனர். விசாரணையில் சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நகைக் கடை உரிமையாளர் கடத்தியது தெரியவந்தது.

நகைக் கடை உரிமையாளர்

நகைக் கடை உரிமையாளர்

நகைக் கடை உரிமையாளர் ஏகாம்பரத்திற்கு சொந்தமான ரூ 12 கோடி மதிப்பிலான நிலம் வீராணத்தில் உள்ளது. இந்த நிலத்தை விற்று தருவதாக பூபதி, நிலத்தின் அசல் பத்திரத்தை வாங்கிக் கொண்டு சென்றதாக தெரிகிறது. அவர் அந்த நிலத்தை விற்பனை செய்து தராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஏகாம்பரம் பூபதியிடம் சென்று, ஒன்று நிலத்தை விற்றுக் கொடு, இல்லாட்டி பத்திரத்தை திருப்பி கொடு, இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம் என கேட்டுள்ளார்.

 நிலத்தை விற்று தராத பூபதி

நிலத்தை விற்று தராத பூபதி

அதற்கு பூபதி நிலத்தையும் விற்று தரமாட்டேன், பத்திரத்தையும் தர மாட்டேன். என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஏகாம்பரம் கூலிப்படைகளை ஏவி பூபதியை கடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக நகைக் கடை உரிமையாளர் ஏகாம்பரம், கடை மேலாளர் பாபு ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

கூலிப்படைத் தலைவன்

கூலிப்படைத் தலைவன்

கூலிப்படைத் தலைவனாக செயல்பட்ட சேலம் எஸ். கொள்ளப்பட்டியை சேர்ந்த பிரபாகரன், குகை பகுதியை சேர்ந்த நவீன்குமார், தாடகப்பட்டி மூணாம்கரடை சேர்ந்த மணிமாறன், அன்னதானப்பட்டியை சேர்ந்த யுவராஜ் ஆகியோரை சேலம் அழகாபுரம் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் பிரபல ரவுடி பூபதி நிலமோசடி புகார்களில் சேலத்தில் உள்ள காவல் நிலையங்களில் குற்றவாளி பட்டியலில் இருப்பது தெரியவந்தது.

5 பெண்களுடன் உல்லாசம்

5 பெண்களுடன் உல்லாசம்

மருத்துவ மாணவி உள்பட 5 பெண்களுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்த நிலையில் ஏமாற்றிய பணத்தை வைத்து அவர்களுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது. தொடர்பில் இருந்த 5 பெண்களும் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவருடன் பூபதி குடும்பம் நடத்தி வருவதும் வெளிச்சத்திற்கு வந்தது.

English summary
Salem Rowdy kidnap incident: He was having living together relationship with 5 women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X