சேலம் அருகே மகனுக்கு விஷ ஊசிப்போட்டு கருணைக்கொலை செய்த தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது
சேலம்: சேலம் அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை விஷ ஊசி போட்டு கொன்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், மகனுக்கு விஷ ஊசிப்போட்டு கருணைக்கொலை செய்ததாக தந்தை, மருத்துவ ஊழியர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
Recommended Video
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ளது கட்சுபள்ளி கிராமம். இங்குள்ள குட்டைக் காரன் வளவு, இப்பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, இவரது மனைவி சசிகலா, இவர்களுக்கு செந்தமிழ்-18, வண்ணத் தமிழ்-14 என இரு மகன்கள் இருந்து வந்தனர் .
இளைய மகன் வண்ணத்தமிழ் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வண்ணதமிழ் சைக்கிள் ஓட்டி பழகிய நிலையில், கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்துள்ளார். காலில் காயமடைந்த வண்ண தமிழுக்கு அப்போதிருந்த கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து இருந்த சூழ்நிலையில், உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புற்றுநோய்
இதனால் சிறுவனின் பெற்றோர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் மருத்துவம் மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். இந்நிலையில் வண்ணத் தமிழின் காலில் காயம் ஏற்பட்ட பகுதியில் புற்றுநோய் உருவானதாகவும் அது மிகவும் மோசமடைந்து மிகவும் பாதிப்புக்குள்ளான நிலை ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

கருணை கொலை
இதனால் பெரியசாமி தனது மகனுக்கு தொடர்ந்து பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் வண்ணத் தமிழின் காலில் ஏற்பட்ட புற்று நோய், நாளுக்கு நாள் தீவிரமடைந்ததாம். இதனால் வண்ணத்தமிழ் கடும் வேதனையில் துடித்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சிகிச்சை அளிக்க பணம் இல்லாத நிலைக்கு பெரியசாமி தள்ளப்பட்டுள்ளார். இது ஒருபுறம் எனில் மகனின், துன்பத்தை காணப் பொறுக்காத பெரியசாமி சிறுவனை கருணை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.

கொலை
இதற்காக எடப்பாடி பகுதியில் உள்ள மருத்துவ உதவியாளர் ஒருவரை அணுகியிருக்கிறார் பெரியசாமி. அவரிடம் தன் மகனுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்து விடும்படி கெஞ்சியிருக்கிறார். இந்நிலையில் ஞாயிறு அன்று மாலை பெரியசாமி வீட்டுக்கு வந்த மருத்துவ உதவியாளர் வண்ணத் தமிழுக்கு ஊசி போட்டுள்ளார். ஊசி போட்டு சிறிது நேரத்தில் வண்ணத் தமிழ் சுருண்டு விழுந்து இறந்தார் என்று அப்பகுதியினர் கூறியிருக்கிறார்கள்.

3 பேர் கைது
இதனிடையே வண்ணத் தமிழ் இறந்தது குறித்து அப்பகுதியினர் சந்தேகம் அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த கொங்கணாபுரம் காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் விஷ ஊசி போட்டு கொன்றதாக வண்ணத் தமிழின் தந்தை பெரியசாமி, மருத்துவ உதவியாளர்கள் பிரபு, வெங்கடேசன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மகனை தந்தையே விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications