2 வருடத்தில் முதன்மை சக்தியாக ஆகிவிட்டோம்.. 30% வாக்கு சதவிகிதம் இருக்கு.. விஜய் பரபரப்பு அறிவிப்பு
சேலம்: என்னை போல தனியாக கட்சி ஆரம்பித்து.. அரசியல் செய்ய முடியுமா? இரண்டு வருடத்தில் முதன்மை சக்தியாக மாறி இருக்கிறோம், 30 சதவிகிதம் வாக்கு சதவிகித்தோடு இருக்கிறோம். உங்களால் இப்படி செய்ய முடியுமா? என்று சேலம் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசி உள்ளார்.
சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசுகையில், ஏய் விஜய்..வீட்டை விட்டு வெளியே வா"ன்னு சொல்றவங்களுக்கு... என் வீடு எதுன்னு தெரியுமா? தமிழ்நாடு, தமிழ்நாடும்னு சொல்றாங்களே.. அது மற்றவங்களுக்கு வேண்டுமானால் State ஆக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவைர என் தாய்நாடான தமிழ்நாடுதான் என் வீடு என் வீட்டில் மொத்தம் 8 கோடி பேர் இருக்கிறார்கள்; ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் என் வீட்டு மக்கள்.. என் குடும்பம்.. என் உறவு. என் சொந்தம்.

எதில் நம்மை கிண்டல் கேலி செய்கிறார்களோ அங்கே இருந்துதான் ஜெயித்து காட்ட வேண்டும் என்ற உத்வேகம் வரும். எனக்கு அனுபவம் இல்லை என்று சொல்கிறார்கள்.. மக்கள் பணத்தை கொள்ளையடித்ததை தவிர இவர்களுக்கு வேறு என்ன அனுபவம் இருக்கிறது.. மக்களின் பணத்தை எடுத்ததை தவிர இவர்களின் அனுபவம் என்ன
நான் நல்ல அரசியல் செய்ய வந்திருக்கிறேன். யாரையும் அழிக்க விரும்பவில்லை. யாரையும் அழிக்க நான் வரவில்லை. என்னை மாதிரி சொந்தமாக கட்சி தொடங்கி 1 சதவிகிதம் வாக்கு உங்களால் வாங்க முடியுமா? அதற்கு திராணி இருக்கிறதா? என்னை போல தனியாக கட்சி ஆரம்பித்து.. அரசியல் செய்ய முடியுமா? இரண்டு வருடத்தில் முதன்மை சக்தியாக மாறி இருக்கிறோம்
30 சதவிகிதம் வாக்கு சதவிகித்தோடு இருக்கிறோம். உங்களால் இப்படி செய்ய முடியுமா? கொள்கை அரசியல்தான் எங்கள் அரசியல். உங்களை போல கொள்ளை அரசியல் செய்ய மாட்டேன். மக்களை நேசிக்கும் , அரசியல், மக்களை பாதுகாப்பாக அன்பாக நடத்தும் அரசியல்தான் என் அரசியல். அந்த அரசியலை என்னால் கொடுக்க முடியும். செஞ்சு காட்டுறேன்.
டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்று சொல்கிறார் ஸ்டாலின்.. ஸ்டாலின் ஆட்சிதான் அவுட் ஆப் கண்ட்ரோல்.. சட்ட ஒழுங்கில் அவரின் ஆட்சி அவுட் ஆப் கண்ட்ரோல் .. பெண்கள் பாதுகாப்பில் அவுட் ஆப் கண்ட்ரோல்.. இளைஞர் நலனில் அவுட் ஆப் கண்ட்ரோல் என்று இந்த ஆட்சியே அவுட் ஆப் கண்ட்ரோல் ஆட்சிதான்.
தைரியம்.. தைரியம்தான் எல்லாவற்றிற்கும் ஒரு அடித்தளம். என் வீட்டில் மொத்தம் 8 கோடி பேர் இருக்காங்க. என்னோட தாய்நாடான தமிழ்நாடு தான் என்னோட வீடு. என் வீட்ல 8 கோடி உறுப்பினர்கள் இருக்காங்க.. பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க.. உங்க பணம்தான்.. பணம் வாங்கிகிட்டு காதுல விசில் ஊதி அனுப்புங்க.
ஓட்டு கேட்டு மட்டும் வரவில்லை... உங்களிடம் நீதி கேட்டு வந்திருக்கிறேன். இந்த விஜய் என்ன தப்பு செய்தான். தன்னை நேசிக்கும் மக்களுக்காக அரசியலுக்கு வந்தான். அது தப்பா? மற்ற கட்சிகளுக்கு மட்டும் கூட்டங்கள் நடத்த அனுமதியும் இடமும் கிடைக்கும். ஆனால், நமக்கு மட்டும் கொடுக்க மாட்டார்கள். இதையெல்லாம் யார் செய்வது என உங்களுக்கு தெரியும். அதனால்தான் உங்களிடம் நீதி கேட்கிறேன், என்று சேலம் கூட்டத்தில் விஜய் பேசி உள்ளார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications