சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்போ அண்ணாமலை? தமிழிசை கையெழுத்து எப்படி வந்தது? கொங்கில் ஏற்பட்ட குழப்பம்.. பதறிய காவிகள்!

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் பாஜக நிர்வாகிகள் சிலரின் நியமனம் கட்சி நிர்வாகிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த அக்கட்சி தீவிரமாக முயன்று வருகிறது. முக்கியமாக அதிமுகவில் மோதல் நிலவி வரும் நிலையில் பாஜகவை எதிர்க்கட்சியாக நிறுவ அக்கட்சி முயன்று வருகிறது.

பாஜக தலைவர் அண்ணாமலையும் எதிர்க்கட்சி தலைவர் போல தொடர்ந்து திமுகவிற்கு எதிராக புகார்களை வீசி வருகிறார்.

பாஜக தலைவர்கள் சிலரும் கூட நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி போல் செயல்படுகிறோம் என்று வெளிப்படையாக தெரிவித்துவிட்டனர்.

2029 பாஜக ஆட்சியில் ராம ராஜ்ஜியம்.. மகாத்மா காந்தியின் கனவு அது.. அண்ணாமலை நம்பிக்கை! 2029 பாஜக ஆட்சியில் ராம ராஜ்ஜியம்.. மகாத்மா காந்தியின் கனவு அது.. அண்ணாமலை நம்பிக்கை!

அண்ணாமலை

அண்ணாமலை

முக்கியமாக கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்த பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக கொங்கு மண்டலத்தில் ஆட்கள் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அந்த வகையில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த பலர் நேற்று சேலத்தில் பாஜகவில் இணைந்தனர். சேலத்தில் பண்ணப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவில் புதிய நிர்வாகிகள் பலர் இணைந்தனர். கொங்கு மண்டலத்தை சேர்ந்த அரசியல் சாராத பொதுமக்கள் பலர் பாஜகவில் உறுப்பினர்களாக இணைந்தனர்.

அதிமுக - திமுக

அதிமுக - திமுக

அதேபோல் அதிமுக - திமுகவில் உறுப்பினர்களாக இருக்கும் நிர்வாகிகள் சிலரும் கூட பாஜகவில் திடீரென இணைந்தனர். ஆனால் இவர்களுக்கு வழங்கப்பட்ட உறுப்பினர் அட்டைதான் சர்ச்சையாகி உள்ளது. பாஜக நிர்வாகிகள் புதிதாக சேர்ந்ததும் அவர்களுக்கு காவி நிறத்தில் உறுப்பினர் அட்டை வழங்கப்படும். மோடி புகைப்படம், பாரத மாதா புகைப்படம் அடங்கிய அட்டை வழங்கப்படும். இதில் மாநில தலைவர் அண்ணாமலை புகைப்படம் இடம்பெற்று இருக்கும்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

ஆனால் நேற்று வழங்கப்பட்ட அட்டையில் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை. மாறாக தமிழிசை சௌந்தரராஜன் பெயர் இடம்பெற்று இருந்தது. பாஜகவின் முன்னாள் தமிழ்நாடு தலைவர்தான் தமிழிசை சௌந்தரராஜன். திடீரென அவரின் பெயர், கையெழுத்து இந்த அட்டையில் இடம்பெற்றது எப்படி என்ற குழப்பம் அங்கு இருந்த பாஜக நிர்வாகிகள் இடையே ஏற்பட்டது. உறுப்பினர் அட்டையை கையில் வாங்கிய புதிய நிர்வாகிகள் பலருக்கும் இதே குழப்பம் ஏற்பட்டது.

Recommended Video

    BJPs Success Operation | திமுகவுக்கு புதிய குடைச்சல்
    குழப்பம்

    குழப்பம்

    அண்ணாமலை தானே பாஜக தலைவர். ஏன் தமிழிசை பெயர் இருக்கிறது என்று நிர்வாகிகள் குழம்பி போனார்கள். அதிலும் தமிழிசை தற்போது புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருக்கிறார். அப்படி இருக்கும் போது அவர் எப்படி கட்சி ஒன்றின் உறுப்பினர் அட்டையில் கையெழுத்து போடலாம் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. பெரும்பாலும் தமிழிசை பாஜக தலைவராக இருந்தபோது அடிக்கப்பட்ட பழைய உறுப்பினர் அட்டையாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

    English summary
    Why did Tamilisai Soundararajan sign in BJP members card in Salem function?சேலத்தில் பாஜக நிர்வாகிகள் சிலரின் நியமனம் கட்சி நிர்வாகிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X