முகமெல்லாம் டேப்பை சுற்றி.. கை கால்களை கட்டி.. காரில் கடத்தி.. சேலத்தில் நடந்த படு பயங்கரம்!
தம்பியை கடத்தி கொன்ற அண்ணன் கைது செய்யப்பட்டார்
சேலம்: முகமெல்லாம் பிளாஸ்டிக் டேப் சுற்றி.. கை, கால்களையும் கட்டி.. காரில் கடத்தி சென்று தம்பியை படுபயங்கரமாக கொலை செய்துள்ளார் அண்ணன்... மூச்சு திணறி திணறியே அந்த உயிரும் பிரிந்துள்ளது.. இந்த கொடூரம் சேலத்தில் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே நல்லண்ணம்பட்டியை சேர்ந்தவர் செல்வம்.. இவர் ஒரு விவசாயி.. இவரது 24 வயது மகன் பூபாலன்.. எம்ஏ படித்துள்ளார்.
கடந்த 7ம் தேதி நைட் வீட்டில் இருந்து பூபாலன் வெளியே சென்றார்... அதுக்கப்பறம் வீட்டுக்கு திரும்பவே இல்லை.. பல இடங்களில் தேடியும் மகனை காணாததால், செல்வம், மகுடஞ்சாவடி போலீசில் புகார் தந்தார்.

போலீஸ்
அதனடிப்படையில் போலீசாரும் பூபாலனை தேடி வந்தனர்.. இந்நிலையில், இளம்பிள்ளை அருகே ரெட்டிமணியகாரனூர் மண்கரடு பகுதியில் ஒரு கார் ரொம்ப நேரமாக நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது... இரவு நேரம் என்றாலும், விரைந்து சென்ற போலீசார், அந்த காரை திறந்து பார்த்தனர்.

கடத்தல்
அப்போது காரின் பின் சீட்டில் பூபாலன் சடலமாக கிடந்தார்.. அவரது கை, கால்கள் கயிறால் கட்டப்பட்டிருந்தது.. முகத்தில் டேப் சுற்றப்பட்டிருந்தது... இதையடுத்து அதிர்ந்த போலீசார், அந்த கார் யாருடையது என்று ஆராய்ந்தனர்.. அதன் உரிமையாளர் ஜெகன் என்பது தெரியவந்தது.. இந்த கொலையை செய்தது, பூபாலனின் பெரியப்பா கந்தசாமி மகன் ஏழுமலை என்பவர்தான்.. இரு குடும்பத்துக்கும் இடையே நிலப்பிரச்சனை சம்பந்தமாக தகராறு நடந்து வந்துள்ளது.

பிளாஸ்டிக் டேப்
அதனால்தான் பூபாலனை கொலை செய்ய ஏழுமலை தன்னுடைய நண்பர்கள் 3 பேரை அழைத்து கொண்டு சென்றுள்ளார்... சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே வந்த பூபாலனை காரில் கடத்தியுள்ளனர்.. அப்போது அவர் சத்தம் போடாமல் இருக்க முகம் முழுவதும் பிளாஸ்டிக் டேப்பால் சுற்றி ஒட்டிவிட்டனர்.. அதற்கு பிறகுதான் அவரை சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள்.

கொலை
முகமெல்லாம் டேப் ஒட்டியிருந்ததால், மூச்சுவிட முடியாமல் திணறி திணறியே பூபாலன் கொஞ்ச நேரத்தில் உயிரிழந்துவிட்டார்... உயிர் பிரிவதை பார்த்தபிறகே ஏழுமலை அங்கிருந்து நகர்ந்து சென்று தப்பி உள்ளார்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, போலீசார் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.. தலைமறைவாக உள்ள இன்னொருவரை தேடி வருகிறார்கள்.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications