"வாவ்".. 56 வயதில் 26 வயது இளைஞரை போல இருக்கும் "சிங்கப்பூர் மாடல்".. இளமையின் ரகசியம் இதுதானா?
சிங்கப்பூர்: 56 வயதில் 26 வயது இளைஞரை போல காட்சியளிக்கும் சிங்கப்பூர் சூப்பர் மாடல் சுவாண்டோ டேன் என்பவர் தான் இன்று உலகம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறார்.
இவ்வளவு இளமையான தோற்றத்தில் உள்ளதால் விமான நிலையங்கள், வெளிநாடுகள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் போது தன்னுடன் தனது பிறப்புச் சான்றிதழை கொண்டு போவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
இளமையாக இருக்க எப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும், எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும் என தெளிவாக சொல்லி அனைவருக்கும் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார் இவர்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாலா...இந்த செயலை எதிர்பார்க்கவில்லையே! பாராட்டும் ரசிகர்கள்

முதுமையை தழுவும் இளைஞர்கள்..
தொழில்நுட்பத்தில் இன்று உலகம் அடைந்திருக்கும் அசாத்திய வளர்ச்சி மனிதக் குலத்திற்கு மாபெரும் நன்மைகளை செய்து வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதே சமயத்தில், மனிதனின் அழிவுக்கும் இது மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. தொழில்நுட்பமும், அறிவியலில் ஏற்பட்ட வளர்ச்சியானது மனிதனை இயந்திரமயமான வாழ்க்கை முறைக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. சிறு சிறு வேலைகளுக்கு கூட இயந்திரத்தை சார்ந்திருக்கும் இன்றைய மனிதனை நோய்கள் ஆக்கிரமிக்க தொடங்கி விட்டன. எந்தவித உடற்பயிற்சியும் இல்லாததால் தற்போது 25 வயதுக்குள்ளேயே சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய நோய்கள் மனிதர்களுக்கு வரத் தொடங்கிவிட்டன. இதனால் 30 வயதிலேயே 50 வயது மதிக்கத்தக்க நபரை போல பெரும்பாலான இளைஞர்கள் மாறி விடுகின்றனர். இதுபோன்ற முதுமை தழுவிய இளைஞர்கள் மத்தியில் 56 வயதில் 26 வயது இளைஞரை போல துள்ளிக் குதிக்கும் நபரை பற்றிதான் இங்கு பார்க்க போகிறோம்.

இவருக்கு 56 வயதா?
சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்தவர் சுவாண்டோ டேன். இவருக்கு 56 வயது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. உடற்பயிற்சி செய்து இளமையாக இருக்கும் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால், அவர்களுக்கு உடல் இளமையுடன் இருக்கும். ஆனால், அவர்கள் வயது ஓரளவுக்கு அவர்கள் முகத்தில் தெரிந்துவிடும். ஆனால், சுவாண்டோ டேனின் முகமும் சரி, உடலும் சரி.. 26 வயது இளைஞனை போல தான் இருக்கிறது.

கெட்டப் பழக்கங்கள் இல்லை
வயிற்றில் சிக்ஸ் பேக்ஸுடனும், முகத்தில் ஒரு சிறு சுருக்கம் கூட இல்லாமலும் இருக்கும் சுவாண்டோ டேன் தான் இன்று சிங்கப்பூரை கலக்கி வரும் சூப்பர் மாடல். எப்படியாவது பெரிய மாடல் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்ததால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு சிறு வயதிலேயே உருவாகியது. இதனால் மது, புகை போன்ற எந்த கெட்டப் பழக்கங்களையும் தன்னை நெருங்காமல் பார்த்துக் கொண்டார் சுவாண்டா டேன். இதுதான் தன்னை இன்னும் இளமையாக வைத்திருப்பதாக அவர் கூறுகிறார்.

"இதுதான் இளமையின் ரகசியம்"
இதுகுறித்து சுவாண்டோ டேன் கூறுகையில், "தினமும் 90 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதை 20 வயது முதலாகவே வழக்கமாக்கி கொண்டேன். உடற்பயிற்சி என்றால் சிலர் ஜிம்முக்கு சென்றுதான் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். வீட்டிலேயே செய்யலாம். இரண்டு மாடிகள் இருந்தால் தினமும் அரை மணிநேரம் அதில் ஏறி இறங்குவது கூட சிறந்த உடற்பயிற்சி தான். அதேபோல, எந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பேன். காலையில் 6 அவித்த முட்டைகளை மட்டுமே சாப்பிடுவேன். இடையில் பசித்தால் பழச்சாறுகளை குடிப்பேன். ஆனால் சர்க்கரை சேர்க்க மாட்டேன். மதியம் அதிக அளவில் காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடுவேன். வாரத்துக்கு 2 நாட்கள் சிக்கன், பீஃப் எடுத்துக் கொள்வேன். சாதத்தை மிகக் குறைவாகவே சாப்பிடுவேன். தேவையான அளவு தண்ணீர் குடிப்பேன். எல்லாவற்றுக்கும் மேலாக என்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வேன். இதை பின்பற்றினால் யார் வேண்டுமானாலும் இளமையாக இருக்கலாம்" என அவர் கூறினார்.