திருடர்களிடமிருந்து பாதுகாப்பாம்.. கதவுக்கு கூட மின் இணைப்பு கொடுத்த மூதாட்டி.. மின்சாரம் தாக்கி பலி
மயிலாடுதுறை: சீர்காழி அருகே வீட்டின் பாதுகாப்பிற்காக கதவு மற்றும் பீரோவில் மின் இணைப்பு கொடுத்து, பாதுகாத்து வந்த மூதாட்டி, அதே மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனவிலங்கு சரணாலயம் மற்றும் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள், தங்கள் விளைநிலங்களில் வனவிலங்குகள் புகுந்து சேதப்படுத்தாத வண்ணம் மின்வேலி மற்றும் மின் தடுப்புகளை வைப்பது வழக்கம். இதனால் இரவு நேரங்களில் ரோந்து பணியில் இருக்கும் வனப் பணியாளர்களுக்கும், வன உயிரினங்களுக்கும் உயிர்ச் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு. சில விவசாயிகள் தங்களது வயல்களில் பயிரிட்ட நெற் பயிர்களை, காட்டு பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க வயல்களை சுற்றி மின்வேலி அமைப்பதும் உண்டு.

மின் வேலிகள்
மின் வேலி அமைத்தல், கம்பி வலைகள் உள்ளிட்ட தடுப்புகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்து வந்தாலும், வனப்பகுதிகளில் உள்ள சில கிராமங்களில், விவசாயிகள் மின்வேலி அமைத்து தங்களது விளை நிலங்களை பாதுகாத்து வருவது தொடர்கதையாகி வருகிறது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, சீர்காழி அருகே வீட்டின் பாதுகாப்பிற்காக கதவு மற்றும் பீரோவில் மின் இணைப்பு கொடுத்து ஒரு மூதாட்டி பாதுகாத்து வந்துள்ளார். ஆனால், பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட அதே மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்புக்காக ஏற்பாடுகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசனே தெருவை சேர்ந்தவர் அன்பழகி என்ற மூதாட்டி, சீர்காழி நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவர் இறந்த நிலையில், குழந்தைகள் யாரும் இல்லாமல் தனிமையில் வசித்து வந்துள்ளார். தன்னுடைய வீட்டின் பாதுகாப்பிற்காக இரவு நேரத்தில் கதவு மற்றும் பீரோவிற்கு மின் இணைப்பு கொடுத்து பாதுகாப்பாக இருந்து வந்துள்ளார்.

மின் இணைப்பை துண்டிக்கவில்லை
இந்நிலையில், நேற்று இரவும் வழக்கம்போல் மின் இணைப்பு கொடுத்து விட்டு தூங்கிய அன்பழகி, இன்று காலை மின் இணைப்பை துண்டிக்காமல் பீரோவை திறக்க முற்பட்டுள்ளார். அப்பொழுது மின்சாரம் தாக்கியதில் அன்பழகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தேவையற்ற செயல்
வெகு நேரம் கடந்தும் அவர் வீட்டை விட்டு வெளியே வராததை அறிந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோதுதான் மின்சாரம் தாக்கி மூதாட்டி இறந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் அன்பழகியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு உள்ளனர். வீட்டின் பாதுகாப்பிற்காக கதவு மற்றும் பீரோவில் மின் இணைப்பு கொடுத்து பாதுகாத்து வந்த மூதாட்டி, அதே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பாதுகாப்பு நடைமுறைகளை தவிர்ப்பது சரியானது என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications