ஐடி ஹேக் ஆகிருச்சுணே.. ஆவேச போஸ்ட்.. ஆனா திமுக நிர்வாகியிடம் போனில் பம்மிய ‘புல்லட்’.. பரவும் ஆடியோ!
சிவகங்கை: பாஜக நிர்வாகி ஒருவர், திமுக கொடி கட்டிய கார் இனி உள்ளே வர முடியாது என எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஃபேஸ்புக்கில் பதிவிட, திமுக நிர்வாகி ஒருவர் அவரை போனில் பேசி மிரட்டும் ஆடியோ பரவி வருகிறது.
சென்னை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட 50 அடி உயர பாஜக கொடி கம்பம், அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டதாக கூறி போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்களால் உடனடியாக அகற்றப்பட்டது. அப்போது நடந்த ரகளையில், ஜேசிபி வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில், பாஜகவினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் தற்போது புழல் சிறையில் உள்ளனர்.

தமிழக அரசால், பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நவம்பர் 1ஆம் தேதி முதல் 100 நாட்கள் தினமும் 100 கொடிக்கம்பங்கள் என 10 ஆயிரம் கொடிக் கம்பங்கள் நடப்படும், வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை பனையூரில் பத்தாயிரமாவது பாஜக கொடிக் கம்பம் நடப்படும் என அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து பாஜகவினர், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜக கொடி கம்பம் அமைக்க தீவிரம் காட்டினர்.
அண்ணாமலை அறிவித்தபடி நவம்பர் 1ஆம் தேதி சென்னை, கோவை உட்பட தமிழ்நாடு பல இடங்களில் பாஜகவினர் கொடிக் கம்பம் அமைக்க முயன்றனர். ஆனால், காவல்துறை அதற்கு அனுமதி மறுத்து, கூட்டம் கூடிய பாஜகவினரை கைது செய்தது. தினமும் 100 பாஜக கொடிக் கம்பங்களை அமைக்க பாஜகவினர் திட்டமிட்ட நிலையில்ம் அந்த பிளானுக்கு சிக்கல் நேர்ந்துள்ளது. அண்ணாமலை போட்ட சபதத்தை நிறைவேற்ற முடியாத ஆதங்கத்தில் பாஜகவினர் உள்ளனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் புதுவயல் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ரமேஷ் என்பவர், ஃபேஸ்புக்கில், திமுகவினரை எச்சரித்து பதிவிட்டிருந்தார். புதுவயல் புல்லட் ரமேஷ் பாஜக என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் இயங்கி வரும் பாஜக சாக்கோட்டை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ரமேஷ் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார்.
அதில், "சாக்கோட்டை கிழக்கு ஒன்றியத்தில் பாஜக கொடி பறப்பதற்கு யாராவது இடையூறாக இருந்தால் அது யாராக இருந்தாலும் சரி, ஒரு திமுக கொடி கட்டிய கார் கூட சிவகங்கை மாவட்டத்திற்குள் நுழைய முடியாது. இது எச்சரிக்கை" என பதிவு செய்திருந்தார். பாஜக நிர்வாகியின் இந்த பதிவு திமுகவினரை கொந்தளிக்கச் செய்தது.
இந்நிலையில், திமுகவின் சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் சின்னதுரை, அந்த பாஜக நிர்வாகி ரமேஷிடம் போனில் பேசுவதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் பேசும் சின்னதுரை, "சிவகங்கை மாவட்டத்திற்குள் திமுக கொடி கட்டுன கார் வரமுடியாதுனு ஃபேஸ்புக்ல போட்டிருக்கீங்களாமே என்ன விவரம்?" எனக் கேட்கிறார். அதற்கு எதிர்முனையில் பேசுபவர், "ஐடி ஹேக் ஆயிருச்சுணே" என பம்முகிறார். இதையடுத்து, "இதுதான் கடைசியா இருக்கணும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார் திமுக ஒன்றிய செயலாளர் சின்னதுரை. இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications