சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"எல்லாத்துக்கும் காரணம் திமுக.. அந்த அமைச்சர்கள்தான்.. இது இருமுனை கத்தி".. எச்.ராஜா ஆவேசம்..!

நீட் தேர்வு குறித்தும், திமுகவை விமர்சித்தும் எச் ராஜா பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சிவகங்கை: நீட் தேர்வு எதிர்ப்புக்கு காரணம் தனியார் மருத்துவ கல்லூரி நடத்துபவர்கள்தான்.. அதிலும் குறிப்பாக திமுக முன்னாள் அதிமுக அமைச்சர்களே காரணம்.. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடந்த சோதனைகள் பழிவாங்கும் நடவடிக்கை.. இது இருமுனை கத்தி.. நான்கரை வருடங்கள் கழித்து திமுக அமைச்சர்களுக்கும் இதேபோல் நடக்கும்" என்று தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா காட்டமாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரம் வெடித்துள்ளது.. இதனால் மாணவ, மாணவியர்கள் அச்சம் காரணமாக தற்கொலை முயற்சியிலும் இறங்கி வருகிறார்கள்.

இதற்கு திமுக அரசுதான் காரணம் என்று அதிமுக குற்றஞ்சாட்டுகிறது.. ஆனால், ஒன்றிய அரசுதான் காரணம் என்று திமுக குற்றஞ்சாட்டுகிறது.. இப்படி மாறி மாறி புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தாலும், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

''நீட் தேர்வு என்னும் அநீதியை எதிர்க்க இதுதான் சரியான வழி''.. காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி யோசனை! ''நீட் தேர்வு என்னும் அநீதியை எதிர்க்க இதுதான் சரியான வழி''.. காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி யோசனை!

 முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

இது தொடர்பாக பாஜக தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.. 2 நாளைக்கு முன்புகூட அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா ஒரு பேட்டி தந்திருந்தார். அதில், "நீட் தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்ப்பது, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்ப்பது போன்ற தீய செயல்களில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது... அதனால்தான் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து இருக்கிறார்... இதற்கு காரணம் முதலமைச்சரும், திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும்தான்.

தீர்மானம்

தீர்மானம்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் காரணமாக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது... சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு மத்திய அரசு நினைத்தாலும் நீட் தேர்வை மாற்ற முடியாது... அப்படி இருக்கும் போது, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகத்தை உருவாக்குகிறார்கள். எல்லா மாநிலங்களிலும் நீட் தேர்வு நடக்கிறது... யாருமே எதிர்க்கவில்லை.. இங்கே தான் இப்படி இருக்காங்க.. சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், முதல்வர் ஸ்டாலினின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது" என்றார்.

விமர்சனம்

விமர்சனம்

இந்நிலையில், சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா மீண்டும் திமுகவை விமர்சித்தும் நீட் தேர்வு குறித்தும் பேசினார்.. அப்போது, "நீட் தேர்விற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தால் எந்த பலனும் இருக்காது.. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் நீட் தேர்வை ஏற்றுகொண்டுள்ளனர். மத்திய அரசு கொண்டுவரும் எல்லா திட்டங்களுக்கும் எதிராக இங்கே தீர்மானம் நிறைவேற்றுவார்கள்.

மருத்துவம்

மருத்துவம்

அந்த தீர்மானங்களால் எந்த பலனும் இருக்காது.. ஏற்கனவே நீட் தேர்வு இல்லாமல் இருந்தபோது மொத்தம் 19 பேர் மட்டுமே அரசு பள்ளியில் படித்தவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்தார்கள்.. ஆனால் இப்போது, அரசு பள்ளியில் பயின்ற ஏழை, எளிய மாணவர்கள் 400 க்கும் மேற்பட்டோர் மருத்துவம் படிக்க சேர்ந்துள்ளனர்...

Recommended Video

    நீட் தேர்வும், மாணவர்கள் உயிரிழப்பும்… திமுக மீது பாய்ந்த பாஜக அண்ணாமலை!
     கூலிப்படை கொலைகள்

    கூலிப்படை கொலைகள்

    நீட் தேர்வு எதிர்ப்புக்கு காரணம் தனியார் மருத்துவ கல்லூரி நடத்துபவர்கள்தான்.. அதிலும் குறிப்பாக திமுக முன்னாள் அதிமுக அமைச்சர்களே காரணம்.. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடந்த சோதனைகள் பழிவாங்கும் நடவடிக்கை.. இது இருமுனை கத்தி.. நான்கரை வருடங்கள் கழித்து திமுக அமைச்சர்களுக்கும் இதேபோல் நடக்கும்.. திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் தென் மாவட்டங்களில் கூலிப்படை கொலைகள் அதிகரிக்கிறது" என்றார்.

    English summary
    H Raja says DMK is the reason for the death of NEET exam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X