சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காரைக்குடி தெருவெல்லாம் ஒரே களேபரம்.. ஓவர் குரங்கு தொல்லை.. குழந்தைகளை விரட்டி கடிக்க வந்து.. பீதி

காரைக்குடி பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்க கோரிக்கை எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சிவகங்கை: காரைக்குடி பகுதிகளில் ஏராளமான குரங்குகள், அங்குள்ள குழந்தைகளை விரட்டி விரட்டி கடிக்கிறதாம்.. இதையடுத்து, கொந்தளித்து போன பொதுமக்கள், குரங்குகளை பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
காரைக்குடி அருகே மாலையிட்டான்பட்டி என்ற பகுதி உள்ளது.. இங்கு ஏராளமான குரங்குகள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன..

4 நாளுக்கு முன்பு அரசு பேருந்து.. இன்னிக்கு 108 ஆம்புலன்ஸ்.. பூம்புகார் எம்எல்ஏவின் அசத்தலான காரியம்4 நாளுக்கு முன்பு அரசு பேருந்து.. இன்னிக்கு 108 ஆம்புலன்ஸ்.. பூம்புகார் எம்எல்ஏவின் அசத்தலான காரியம்

பொதுவாக மலைப்பிரதேசங்களில், மலைப்பாங்கான இடங்களில் காணப்படும் குரங்குகள் இந்த ஊருக்குள் கேஷூவலாக வந்து போகின்றன.. சாலையோரங்களில் மட்டுமல்லாமல், சில சமயம் ஊருக்குள்ளும் குரங்குகள் வந்துவிடுகின்றன.

 வீதிகள்

வீதிகள்

அந்த ஊரில் உள்ள தெருக்களிலும் இஷ்டத்துக்கும் சுற்றிக் கொண்டுள்ளன.. இதுபோக அங்குள்ள வீடுகளுக்குள் திடீரென உள்ளே நுழைந்து, கிச்சனில் வைத்திருக்கும் உணவு பொருட்களை சூறையாடிவிட்டு போய்விடுகின்றன.. சில உணவு பொருட்களை கையோடு எடுத்து கொண்டும் ஓடிவிடுகின்றன.. இதை தடுக்க சென்றால், பொதுமக்களை கடிக்க வருகிறதாம்..

 விளையட்டு

விளையட்டு

குழந்தைகள் தெருவில் விளையாடினால் அவர்களை கடிக்க வருகிறதாம்.. இப்போது கொரோனாவுக்கு பள்ளிகள் லீவு என்பதால், குழந்தைகள் தெருவில்தான் பொழுதை விளையாடி கழிக்கின்றனர்.. அவர்களும் இந்த குரங்குகளுக்கு பயந்து கொண்டு வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கின்றனர்..

 அச்சம், பீதி

அச்சம், பீதி

பொதுமக்கள் தெருவில் நடந்தாலும், அவர்கள் கைகளில் வைத்திருக்கும் உணவு பொருட்களை பறித்து சென்றுவிடுகிறது... திடீரென்று சிறுவர்கள், குழந்தைகள் மீதும் பாய்ந்து பிராண்டி விடுவதாக ஊர் மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.. வீடுகளின் மாடிகள், அருகிலுள்ள மரங்களில் தஞ்சம் அடைந்துள்ள அந்த குரங்குகள் வீட்டின் கதவுகள் சிறிது திறந்திருந்தாலோ, ஜன்னல்கள் வழியாகவோ உள்ளே புகுந்துவிடுகிறது.. வீடுகளை ரெண்டாக்கி வருவதோடு, அங்கிருக்கும் பொருட்களையும் வீணாக சிதறடித்து விட்டு செல்கின்றன..

கோரிக்கை

கோரிக்கை

சில சமயம், குரங்குகள் வீட்டிற்குள்ளேயே நீண்ட நேரம் இருப்பதால், வீட்டில் உள்ளவர்கள் வெளியேவே நின்று கொண்டிருக்க நேரிடுவதாக சொல்கிறார்கள்.. அதையும் மீறி அந்த குரங்குகளை பிடித்து கொண்டு போய் வனப்பகுதிகளில் கொண்டுபோய் விட்டாலும் மறுபடியும் ஊருக்குள்ளே வந்துவிடுகின்றனவாம்.. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட, ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னர் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

English summary
Monkeys torture increased in Maalayittanpatti near Karaikkudi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X