சொகுசு காரில் வைத்து இளம்பெண் படுகொலை.. காரைக்குடி அருகே அதிர்ச்சி சம்பவம்!
சிவகங்கை: காரைக்குடி அருகே சொகுசு காரில் வைத்து பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் காரில் கொல்லப்பட்டவர், காரைக்குடியைச் சேர்ந்த பாண்டி குமார் மனைவி மகேஸ்வரி (35) என்பது தெரியவந்தது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிமருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் பாண்டி குமார். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (35) இன்று காலை தனது சொகுசு காரில் ஆவுடபொய்கை அருகே உள்ள சாய்பாபா காலனி பகுதியில் தைலமர காட்டுப்பகுதியில் அவரது காரிலேயே வைத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், பிணமாகக் கிடந்தார்.

காரில் இருந்த மகேஸ்வரின் உடலைக் கைப்பற்றி குன்றக்குடி காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்கு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் தேவகோட்டை டிஎஸ்பி பொறுப்பு கௌதம் விசாரணை மேற்கொண்டார்.
சம்பவ இடத்திற்கு சிவகங்கையில் இருந்து கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்து வருகின்றனர். மோப்பநாய் முகுளி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இளம்பெண் காட்டுப்பகுதியில் காரில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications