சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூர்யானா என்னனு தெரியுமா? தலைமை ஆசிரியை கொலை வழக்கில் திடுக் திருப்பம்! திணறிப்போன திருப்பத்தூர்!

Google Oneindia Tamil News

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கான்பா நகரில் வசித்து வந்தவர் ரஞ்சிதம் இவர் தென்மாபட்டு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி தலைமை ஆசிரியர் ரஞ்சிதம் வெகு நேரமாகியும் பள்ளிக்கு வராததால், உடன் பணியாற்றும் ஆசிரியை இந்திராணி மற்றும் ராேஸ்லின் ஆகிய இருவரும் தலைமையாசிரியரின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்கதவு பூட்டிருந்ததை கண்டு பின்பக்கம் சென்று பார்த்தனர்.

தலைமை ஆசிரியை கொலை

தலைமை ஆசிரியை கொலை

அப்போது தலைமை ஆசிரியர் ரஞ்சிதம் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை
கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் திருப்பத்தூர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக,
சம்பவ இடம் வந்த போலீசார் ரஞ்சிதத்தின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

கொடூர சம்பவம்

கொடூர சம்பவம்

இந்நிலையில் கை கால்களில் நரம்புகளை துண்டித்தும் வெட்டு காயங்களுடன் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில் வெளி மாநில கும்பலின் கைவரிசையா என்றும் போலீசார் சந்தேகப்பட்டனர். இந்த நிலையில் சில்லாம்பட்டி விளக்கு பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியில் சந்தேகப்படும்படியாக வந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த இளைஞர் நெடுமரம் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்பதும் தலைமை ஆசிரியை கொலை வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

திடுக்கிடும் தகவல்கள்

திடுக்கிடும் தகவல்கள்

இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தலைமை ஆசிரியை ரஞ்சிதத்தின் தம்பியான பாண்டி வேல்முருகன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நதியாவுக்கும் சூர்யாவுக்கும் முறையற்ற உறவு இருந்துள்ளது இதனை அறிந்த பாண்டி வேல்முருகன் குடும்ப செலவிற்கு நதியாவிற்கு பணம் அனுப்பாமல் தனது சகோதரியான ரஞ்சிதத்திற்கு பணத்தை அனுப்பியுள்ளார்.

இருவர் கைது

இருவர் கைது

இதனால் ஆத்திரமடைந்த நதியா ரஞ்சிதத்தை கொலை செய்ய முடிவு செய்து ஆறாம் தேதி இரவு அவரை கழுத்தை நெறித்து நரம்புகளை துண்டித்து கொலை செய்தனர். அவர் அணிந்திருந்த நகைகள் பணம் என சுமார் 60 சவரன் தங்க நகைகள் 2 லட்சம் ரூபாய் பணத்தை திருடியதோடு வீட்டின் கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்றுள்ளனர் தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் இருந்து பணம் நகை ஹார்ட் டிஸ்க் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

English summary
While two persons, including a woman, have been arrested in the case of the murder of the headmaster of a high school in Sivagangai district's Tiruppathur, shocking information has come out about the reason for the murder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X