சிவகாசி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காளையார்குறிச்சி பட்டாசு ஆலை வெடி விபத்துக்குக் காரணம் என்ன - மாவட்ட ஆட்சியர் பகீர்

பட்டாசு விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார்.

Google Oneindia Tamil News

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த காளையார்குறிச்சியில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கண்ணன், நீர்த்துப்போன மருந்தை உபயோகப்படுத்தியதால் வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதுடன் பட்டாசு ஆலையின் உரிமம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறதா, ஆலையில் விதிமீறல் ஏதும் உள்ளதா என விசாரணை மேற்கொண்டனர்.

Reason for explosion at the Kalaiyarkurichi firecracker factory - District Collector

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணைன் சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவரை நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார் பின்பு செய்தியாளர்களிடம் சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் முதற்கட்டமாக நீர்த்துப்போன மருந்தை உபயோகப்படுத்தியதால் வெடி விபத்து ஏற்பட்டதாகவும் கண்ணன் தெரிவித்தார் மேலும் 6 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் இடிபாடுகளில் சடலங்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் 19 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஆறு பேர் பலி - டாக்டர் ராமதாஸ், கமல் இரங்கல்சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஆறு பேர் பலி - டாக்டர் ராமதாஸ், கமல் இரங்கல்

பட்டாசு ஆலை உரிமையாளர் தங்கராஜ் எம் புதுப்பட்டி காவல்நிலையத்தில் தாமாக முன்வந்து சரணடைந்த இருப்பதாகவும் கூறிய மாவட்ட ஆட்சியர், பட்டாசு ஆலை பராமரிப்பு ஆய்வுக்குழு கூடிய விரைவில் அனைத்து பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பட்டாசு தொழிலை முறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?' என்பது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டிருந்தது. ஏற்கெனவே, அச்சங்குளத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 23 பேர் உயிரிழந்த சோகம் விலகாத நிலையில் தொடர்ந்து இன்று நடந்த வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தது பட்டாசுத் தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Six people have been killed in a firecracker accident in Kalaiyarkurichi next to Sivakasi in Virudhunagar district. Many are being treated for life-threatening conditions. District Collector Kannan, who inspected the scene of the accident, said that the explosion occurred due to the use of diluted mixing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X