நாளை மறுநாள் 5 மாநில சட்டசபை தேர்தல் ரிசல்ட்-'சிவகாசி'யே பட்டாசு வெடிச்சு கொண்டாடுது- ஏன் தெரியுமா?
சிவகாசி: சிவகாசி பட்டாசு ஆலைகள் இந்த ஆண்டு 2-வது தீபாவளியை கொண்டாடுகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ6,000 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்ற நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் ஆர்டர்கள் குவிந்து வருவதுதான் இதற்கு காரணம்.
சிவகாசி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பல நூறு பட்டாசு ஆலைகள் சிறியதும் பெரியதுமாக இயங்கி வருகின்றன. ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்காக ஆண்டு முழுவதும் சிவகாசி பட்டாசு ஆலைகள் பட்டாசுகளை உற்பத்தி செய்கின்றனர்.

கடந்த காலங்களைப் போல இல்லாமல் அண்மைகாலமாக பட்டாசுகள் வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதனால் பட்டாசு தொழில் மிக கடுமையான சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு சுமார் ரூ6,000 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றிருந்தது. பட்டாசு தொழிலில் உருவாகும் நெருக்கடிகளை எதிர்கொண்டு அதற்கேற்ப தங்களை பட்டாசு ஆலைகள் உருமாற்றம் செய்து கொள்வதால் இந்த ஆண்டு வர்த்தகம் திருப்திகரமாக இருந்தது என்பது பட்டாசு தயாரிப்பாளர்களின் கருத்து.
உதாரணமாக கொண்டாட்டங்களின் போது சரவெடிகளை வெடித்து மகிழ்வது இயல்பான ஒன்று. ஆனால் சரவெடிகளுக்கு தடைகள், கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இதனால் சரவெடிகளுக்கு மாற்றாக ஷாட் வகை வெடிகளை களமிறக்கினர் பட்டாசு ஆலைகள். இந்த ஷாட் வகை பட்டாசுகளுக்கு இப்போது ஏக டிமாண்ட்.
பொதுவாக தீபாவளி முடிந்த பின்னர் வெளிமாநிலங்களுக்கு சென்று பட்டாசு ஏஜென்சிகளிடம் பணம் வசூல் செய்வது சிவகாசி பட்டாசு ஆலைகளின் வழக்கம். இந்த முறையோ இப்போதும் சிவகாசியில் வெளிமாநில வியாபாரிகள் சாரை சாரையாக குவிந்து ஆர்டர்களை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். இதனால் தீபாவளி முடிந்த பின்னரும் சிவகாசி பட்டாசு ஆலைகள் படுபிஸியாக இருக்கின்றன.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் இருந்துதான் பட்டாசுகளுக்கான ஆர்டர்கள் அதிக அளவில் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்த 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இதனை ஒட்டியே இப்புதிய ஆர்டர்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. இதனால்தான் சிவகாசி இந்த முறை 2-வது தீபாவளியை கொண்டாடுகிறது என்கின்றனர் பட்டாசு தயாரிப்பாளர்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications