முடியவே முடியாது.. சிஎஸ்கே அணிக்கு போன கெட்ட செய்தி.. கடைசி வரை முயன்று.. தோனி பிளான் தோல்வி?
சென்னை: 2024 ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி எடுத்த முடிவு ஒன்று தோல்வியில் முடிந்துவிட்டதாக அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2024 ஐபிஎல் ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. துபாயில் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல வீரர்கள் அணிகளுக்கு இடையே மாற வாய்ப்புகள் உள்ளன. அடுத்த ஆண்டு ஐபிஎல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. முக்கியமாக பல பெரிய வீரர்கள் பல அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
ஏலம்: பொதுவாக ஐபிஎல் ஏலத்தின் போதுதான் வீரர்கள் மாற்றம் எல்லாம் விவாதம் ஆகும். ஆனால் இந்த முறை ஏலத்திற்கு முன்பாக ரிட்டென்ஷன் சமயத்திலேயே இந்த விவகாரம் டிரெண்டாகி உள்ளது. காரணமாக ஹர்திக் பாண்டியா, கேமரூன் கிரீன் போன்ற முக்கிய வீரர்கள் அணிமாறியதே.
சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: MS தோனி (கேப்டன் & wk), மொயின் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே (wk), துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜின், ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா. வெளியிடப்பட்ட வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா.
தோல்வியில் முடிந்த தோனி பிளான்: 2024 ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி எடுத்த முடிவு ஒன்று தோல்வியில் முடிந்துவிட்டதாக அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி சிஎஸ்கே அணியில் அம்பதி ராயுடு ஓய்வு பெற்றுள்ளார். இதனால் அவர் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளார். அம்பதி ராயுடு ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில்.. அவருக்கு மாற்று வீரர் இன்னும் எடுக்கப்படவில்லை. ஏலத்தின் போதுதான் அவர் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அதற்கு முன்பாக சிஎஸ்கே அணி அம்பதி ராயுடு இடத்திற்கு சில வீரர்களை எடுக்க முயன்று உள்ளது. தோனியின் முயற்சியின் பெயரில் சில வீரர்கள் பெயர் பட்டியலிடப்பட்டு உள்ளது. தோனி கொடுத்த லிஸ்ட் அடிப்படையில் சில வீரர்களை சிஎஸ்கே அணிக்குள் கொண்டு வர அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
தீவிரமான கோரிக்கை: காசி விஸ்வநாதன் தீவிரமாக முயன்று சில வீரர்களை அணிக்குள் எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் முயன்ற வீரர்கள் யாரையும் எடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. டிரேட் செய்வதற்கும் சரி.. மொத்தமாக கேஷ் டீலிங்கில் வீரர்களை மாற்றுவதற்கும் சரி.. எந்த அணியும் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
சிஎஸ்கே முயன்ற வீரர்கள் யாரையும் எந்த அணியும் விட்டுக்கொடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. தோனி கொடுத்த லிஸ்டில் இருந்த வீரர்கள் யாரையும் வேறு அணிகள் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பெரும்பாலும் சிஎஸ்கே அணி ஷாருக்கான் உள்ளிட்ட தமிழ்நாட்டு வீரர்களை அணியில் ஏலத்தின் போது எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications