Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த வீரரை தூக்க திட்டமிட்ட சிஎஸ்கே.. வெளியே தெரிந்தால் பூகம்பமே வெடிக்கும்.. தோனி அண்ட் கோ பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணி முக்கியமான ஒரு வீரரை அணிக்குள் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இப்போதும் அந்த வீரர் சிஎஸ்கே அணியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

2024 ஐபிஎல் தொடருக்காக பல்வேறு அணிகள் முக்கியமான வீரர்களை ரீ டெயின் செய்துள்ளன. உதாரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இரண்டு சீசன்களை வழி நடத்திய ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். குஜராத் அணியால் இவர் ரீ டெயின் செய்யப்பட்டார். அதன்பின் கொஞ்ச நேரத்தில் மீண்டும் இவர் மும்பை அணிக்கு மாறிவிட்டார் என்று செய்திகள் வந்தன.

 Did CSK plan to get a big player from a very Big franchise amid the IPL 2024 retention?

இதற்கான கேஷ் டீலிங் ஒப்பந்தம் இரண்டு உரிமையாளர்களுக்கும் இடையில் நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது முழுக்க கேஷ் ஏலத் தொகை + கூடுதல் பணம் + விளம்பர வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.முக்கியமாக ரோஹித் சர்மா இனி ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் ஆடுவார் என்று கூறப்படுகிறது.

சென்னை அணியின் பிளான்: இதேபோல் சென்னை அணியும் முக்கியமான சில பிளான்களை ஐபிஎல்லை முன்னிட்டு நடத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி முக்கியமான ஒரு அணியில் இருக்கும் மிக முக்கியமான ஒரு வீரரை சிஎஸ்கே அணிக்கு எடுக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மட்டும் வெளியே தெரிந்தால் ஐபிஎல் தொடரில் பூகம்பமே வெடிக்கும் என்று ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக சிஎஸ்கே அணி வட்டாரத்தில் விசாரித்ததில்.. சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சனுக்கு முயன்றதாக கூறப்படுகிறது. சிஎஸ்கே அணியில் கீப்பிங் செய்ய.. எதிர்காலத்தில் கேப்டனாக நியமிக்க வசதியாக சஞ்சு சாம்சனை அணிக்குள் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

சிஎஸ்கே குறி வைத்த வீரர்: சிஎஸ்கே அணி இதற்காக பல கோடிகளை கொடுக்க முயன்றும் கூட.. அதற்கு ராஜஸ்தான் அணி தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.ஆனால் அதே சமயம் சஞ்சு இன்னமும் சிஎஸ்கே அணியுடன் நெருக்கமாகவே இருக்கிறார். பெரும்பாலும் எதிர்காலத்தில் அவர் சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

2024 ஐபிஎல் ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. துபாயில் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல வீரர்கள் அணிகளுக்கு இடையே மாற வாய்ப்புகள் உள்ளன. அடுத்த ஆண்டு ஐபிஎல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. முக்கியமாக பல பெரிய வீரர்கள் பல அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

ஏலம்: பொதுவாக ஐபிஎல் ஏலத்தின் போதுதான் வீரர்கள் மாற்றம் எல்லாம் விவாதம் ஆகும். ஆனால் இந்த முறை ஏலத்திற்கு முன்பாக ரிட்டென்ஷன் சமயத்திலேயே இந்த விவகாரம் டிரெண்டாகி உள்ளது. காரணமாக ஹர்திக் பாண்டியா, கேமரூன் கிரீன் போன்ற முக்கிய வீரர்கள் அணிமாறியதே.

சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: MS தோனி (கேப்டன் & wk), மொயின் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே (wk), துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜின், ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா. வெளியிடப்பட்ட வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+