திடுக் பார்முலா.. பக்கா பிளானோடு ஆடும் இந்தியா.. விடாமல் பவுலர்களை மாற்றி.. திணறிய கேன் வில்லியம்சன்
சென்னை: நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை செமி பைனல் ஆட்டத்தில் இன்று இந்தியா ஆடும் விதம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. பக்கா பிளானோடு இந்திய அணி ஆடி வருகிறது.
முதல் பவர் பிளேவில் 10 ஓவர்களுக்கு 84 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது. ரோஹித் சர்மாவின் விக்கெட் மட்டும் இன்று வீழ்ந்துள்ளது. பவர் பிளே முழுக்க டாமினேட் செய்து இந்திய அணி அதிரடியாக ஆடி வருகிறது.
குறைந்தது ஓவருக்கு 7 ரன்கள்.,. அதிகபட்சம் 9 ரன்கள் என்று உசேன் போல்ட் வேகத்தில் இந்திய அணி ஆடி வருகிறது. இன்று டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணிக்கு இது சாதகமாக மாறி உள்ளது. இன்று ஆடும் இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன் ), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே.), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் அணியில் மாற்றம் செய்யப்படவில்லை ஆகியோர் உள்ளனர்.

டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம் (வி.கே), கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட் ஆகியோர் நியூசிலாந்து அணியில் உள்ளனர்.
பிளான் என்ன?: நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை செமி பைனல் ஆட்டத்தில் இன்று இந்தியா ஆடும் விதம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால் ரோஹித் சர்மா தொடக்கத்திலேயே விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் சிக்ஸ், பவுண்டரி என்று ஆடினார். தொடக்கத்திலேயே 4 சிக்ஸ், 4 பவுண்டரி என்று ஆடினார்.
( செமி பைனலுக்கு முன்.. கசிந்த அந்த மெயில்.. இந்திய அணிக்கு எகிறிய பிரஷர்.. ஒரே நடுக்கம்.. ஏன்?)
வெறும் 29 பந்தில் 47 ரன்களை ரோஹித் சர்மா எடுத்தார். அவருக்கு இந்த சீசனில் இருக்கும் ஒரே ரோல்.. வேகமாக ஆடுவது. தொடக்க பவர் பிளேயில் அதிக ரன்களை எடுப்பது. சரவெடியாக் வெடித்து ரன்களை குவிப்பது. மிக வேகமான தொடக்கம் கொடுப்பது. இதுதான் இந்திய அணியில் ரோஹித் சர்மாவின் ரோல். இந்த சீசன் முழுக்க அவர் ஆடியது இப்படித்தான். இதன் காரணமாகவே இன்று 10 ஓவர் முடியும் வில்லியம்சன் மூன்று முறை பவுலர்களை மாற்றினார்.
கில் மற்றும் கோலி: ஆனால் கில், கோலியின் ரோல் அப்படி இல்லை. அவர்களின் ரோல் மெதுவாக ஆடுவது. முக்கியமாக ஆண்கள் இன்னிங்ஸ் ஆடுவது. கடைசி வரை களத்தில் இருப்பது. எதிரில் விக்கெட் விழுந்தாலும்.. விக்கெட்டை இழக்காமல் ஆடுவது. ஒருவர் செஞ்சுரி அடித்தால் மொத்த அணியின் ஸ்கோர் கூடும்.. 230 அடிக்க வேண்டிய இடத்தில் எளிதாக 330 ரன்களை ஒரு செஞ்சுரி கொடுக்கும்.

இதனால்தான் அவர் மெதுவாக ஆட வேண்டும் என்று ரோல் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுபோக அணியில் கோலிக்கு கொடுக்கப்பட்டு ரோல் இதுதான். இந்திய அணியில் ஆங்கர் ரோல் சீனியர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. கோலி. - ரோஹித் - கே எல் ராகுல் மூவரில் ஒருவர் கண்டிப்பாக ஆங்கர் ரோல் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. உதாரணமாக ரோஹித் வேகமாக தொடக்கம் கொடுத்து அவுட் ஆனார் என்றால் அதன்பின் கோலி மெதுவாக ஆடினாலும் விக்கெட்டை இழக்காமல் கடைசி வரை இருக்க வேண்டும்.
எதிரே விக்கெட் சென்றாலும் மெதுவாக ஆடி ரன் சேர்க்க வேண்டும். இந்திய அணியில் இந்த ஆங்கர் ரோல் இத்தனை காலம் மிஸ்ஸானது. அது மீண்டும் திரும்பி வந்துள்ளது. அதனால்தான் எதிரே விக்கெட் விழுந்தாலும் கோலி முடிந்த அளவு நிதானமாகவே ஆடி அணியின் ரன்னை உயர்த்தி வருகிறார். ரன் ரேட் பற்றி கவலைப்பட வேண்டாம்.. டீம் மொத்தமாக சரியாமல் பார்த்துகொள்ளங்கள் என்ற ரோல்தான் கோலிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இதைத்தான் நேற்று ரோஹித்தும்.. கோலி ஆடியது போல இந்த பிட்சில் ஆடுவது கடினம் என்று கூறி பாராட்டி இருந்தார்.












Click it and Unblock the Notifications