26 ஆண்டுகள் தேடி அலைந்தேன். 2 பேருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்! வருண் சக்கரவர்த்தி நெகிழ்ச்சி
சென்னை: அண்மையில் முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதுமட்டுமல்லாமல் 2021 டி20 உலகக்கோப்பையில் இதே துபாய் மைதானத்தில் தான் வருண் சக்கரவர்த்தி கடைசியாக விளையாடி இருந்தார்.
அதன்பின் இந்திய அணிக்காக அவர் தேர்வு செய்யப்படவே இல்லை. இந்த நிலையில் எங்கு வீழ்ந்தாரோ, அதே மைதானத்தில் தமிழ்நாட்டின் வருண் சக்கரவர்த்தி எழுந்து நின்றுள்ளார். மிகப்பெரிய கம்பேக் இல்லையென்றாலும், 33 வயதில் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்து கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தது எளிதான சம்பவம் கிடையாது.

அதுமட்டுமல்லாமல் வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பாக எடிட்டிங், கிடார் இசைக் கருவியை கற்பது, இயக்குநராக முயற்சித்தது, கட்டட பொறியாளராக பணியாற்றியது என்று ஏராளமான முயற்சிகளை செய்திருக்கிறார். இதுதொடர்பாக வருண் சக்கரவர்த்தி பேசியுள்ள சம்பவம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக ட்ரெண்டாகி வருகிறது.
அதில் வருண் சக்கரவர்த்தி பேசுகையில், நான் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றதற்கு முன்பாக செய்த பணிகளில் வெற்றியும் பெறவில்லை. அதேபோல் தோல்வியாகவும் பார்க்கவில்லை. அதனை ஒரு அனுபவமாகவே பார்க்கிறேன். 20 வயதை எட்டிய போது என் வாழ்க்கை கடினமாக அமைந்தது. கல்லூரி வாழ்க்கைக்கு பின் வாழ்வின் உண்மை முகத்தில் அடித்தது.
ஆர்கிடெக்ட் நிறுவனத்தில் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினேன். அதன்பின் சொந்தமாக நிறுவனம் தொடங்கி ஓராண்டு நடத்தினேன். அப்போது வீசிய புயல் காரணமாக எனது முதலீடுகள் மொத்தமாக போய்விட்டது. அதன்பின் குறும்படங்களை எடுக்க தொடங்கினேன். ஜீவா படத்தில் உதவி இயக்குநராக பணியாற்ற முயற்சித்தேன். அதன்பின் ஜீவா படத்தில் நடித்தேன்.
எனக்கு என்ன தேவை என்பதை தேர்வு செய்யவே 26 ஆண்டுகள் போய்விட்டது. ஏனென்றால் குறும்படம் எடுப்பது, வாரணம் ஆயிரம் படத்தை பார்த்து கிடார் கற்றுக் கொண்டது உள்ளிட்டவையெல்லாம் மற்றவர்களின் பாராட்டுகளை பெறுவதற்காகவே செய்தேன். கிடார் பயிற்சியை ஒரு மணி நேரத்திற்கு மேலாக என்னால் கொஞ்சம் கூட செய்ய முடியவில்லை. அவ்வளவு கடினமாக இருந்தது.
அதன்பின் ஒரு கட்டத்தில் எனக்கு என்ன பிடிக்கும் என்று உணர்ந்துதான் கிரிக்கெட் பக்கம் வந்தேன். ஏற்கனவே ஜோனல், ரஞ்சி போட்டிகளில் ஆடி இருக்கிறேன். அதனால் சாதாரணமாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடங்கிய பயணம்தான் கிரிக்கெட். அதன்பின் டிஎன்பிஎல் மூலம் பிரேக் கிடைத்தது. அங்கிருந்து இப்போது வரை பயணிக்கிறேன்.
யாரும் இல்லாத தனியொரு உலகத்தில் என்னை தனித்துவிட்டாலும் நான் பவுலிங் செய்து ஜாலியாக இருப்பேன். ஏனென்றால் கிரிக்கெட் விளையாடுவது எனக்கு பிடித்திருக்கிறது. கேகேஆர் அணிக்கு தினேஷ் கார்த்திக் தான் என்னை அழைத்து சென்றார். அதேபோல் ஒரேயொரு ஆண்டு மட்டும் பார்த்துவிட்டு, கம்பீர் இந்திய அணியில் என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தார். அவர்கள் இருவருமே முக்கியமானவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications