விஜயகாந்துக்கு அப்பறம்.. பாகிஸ்தான் கிட்ட இருந்து இந்தியாவை காப்பாத்துறது கோலிதான்! டிரெண்டான மீம்ஸ்
துபாய்: பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்தியாவிற்கு எதிராக தோல்வி அடைந்ததை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். முக்கியமாக நேற்று ஆட்டத்தில் கோலி அடித்த சதத்தை வைத்தும் நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
வென்ற இந்தியா
சாம்பியன் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. பாபர் அசாம் அவுட் ஆன பின் அப்படியே நேற்று மேட்ச் மாறியது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். பாகிஸ்தான் பேட்டர் ஜமானுக்குப் பதிலாக இமாம்-உல்-ஹக்கைக் அந்த அணி எடுத்தது. அதே நேரத்தில் இந்தியா இந்த ஆட்டத்தில் அதே லெவன் அணியை வைத்து ஆடியது.

கோலி சதம்
இதில் கோலி அடித்த சதத்தை வைத்து பல மீம்ஸ் போடப்பட்டு உள்ளது. நேற்று பாகிஸ்தான் நிர்ணயம் செய்த 242 ரன்களை இந்தியா எளிதாக எட்டியது, 7.3 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் எளிதாக கோலி சதம் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெறுவது உறுதியாகிவிட்டது.

பாகிஸ்தான் அணி எலிமினேஷன் ஆவது உறுதியாகி உள்ளது. நேற்று பேட்டிங்கில் கோலி (100*), ஷ்ரேயாஸ் ஐயர் (56), ஷுப்மான் கில் (46) ஆகியோர் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தனர். பந்து வீச்சில், குல்தீப் யாதவ் 3/40 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
பாகிஸ்தான் வெளியேறியது
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்து முதல் ஆளாக போட்டியை நடக்கும் பாகிஸ்தான் அணியே வெளியேறி உள்ளது. நேற்று இந்தியாவிற்கு எதிரான தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. இதை வைத்து பாகிஸ்தான் ரசிகர்கள் கதறும் வீடியோக்களை பகிர்ந்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டுள்ளனர்.

தொடர்ந்து தோற்கும் பாகிஸ்தான்
2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா இன்னும் பாகிஸ்தானிடம் தோற்கவே இல்ல. அந்தப் போட்டிக்குப் பிறகு வரிசையாக 6-0 என்று இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

நேற்று பாகிஸ்தான் அணியில் ஷகீல் மட்டும் 62 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் அவுட் ஆனது இந்திய அணிக்கு சாதகமாக மாறியது.
கிண்டலடிக்கப்பட்ட பாபர் அவுட் ஆனது எப்படி?
இதையடுத்து பாபர், ரிஸ்வான் ஆகியோரை நெட்டிசன்கள் கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர். நேற்று ஹர்திக் வந்த நேரம் ஆட்டம் மாறியது. தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தான் நிதானமாக ஆடியது. ஆனால் இப்போது திணற தொடங்கி உள்ளது. ஹர்திக் பாண்டியாவின் ஓவரில் முதல் பந்தில் பாபர் அசாம் பவுண்டரி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த பந்திலேயே பாபர் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா எடுத்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போடப்பட்ட பேக் ஆஃப் லெங்த் டெலிவரி பந்தை பாபர் கவர் டிரைவ் அடிக்க முயன்றார்.

ஆனால் பந்தை சரியாக கணிக்க முடியாமல் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பாபர் 26 பந்துகளில் 23 ரன்களில் வீழ்ந்தார். இதையடுத்து ஸ்டன் ஆகி பார்த்த பாபர் அசாமை டாட்டா காட்டி அனுப்பி வைத்தார் ஹர்திக் பாண்டியா. இப்படி பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்தை விமர்சனம் செய்து மீம்ஸ்கள் டிரெண்டாகி வருகின்றன.

-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications