பீல்டிங் கோச் யாருப்பா.. ரசிகர்களை கடுப்பாக்கிய சிஎஸ்கே வீரர்கள்.. அந்த சம்பவம்.. நோட் பண்ணீங்களா?
சென்னை: பெங்களூருக்கு எதிராக தற்போது நடந்து வரும் ஐபிஎல் 2025 லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் பீல்டிங் மிக மோசமாக உள்ளது. கேட்சஸ் வின்னிங் மேட்சஸ் என்று சொல்வார்கள். ஆனால் இன்று சிஎஸ்கே அதை பற்றி யோசிக்காமல் மிக மோசமாக சொதப்பி உள்ளது.
சிஎஸ்கே - பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 தொடரின் லீக் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தற்போது மேட்ச் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. முதல் ஓவரிலே பெங்களூர் அணியின் சால்ட் அடித்து ஆட தொடங்கினார். அவர் முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளுடன் 9 ரன்கள் எடுத்தார்.
அதன்பின் வேகம் எடுத்த சால்ட் விடாமல் அடித்தார். அதிலும் அஸ்வின் ஓவரில் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு சிக்ஸ், பவுண்டரி என்று 16 ரன்கள் எடுத்தார். 5வது ஓவரில் நூர் அஹமது வந்த பின்புதான் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது. அந்த ஓவரில் சால்டை நிற்க வைத்து பிரஷர் கொடுத்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் தோனி அசத்தலான ஸ்டம்பிங் விக்கெட் எடுத்தார்.

அதன்பின் வந்த படிக்கல்லும் இரண்டு சிக்ஸ் என்று பயம் காட்டினாலும் அவரின் விக்கெட்டையும் சிஎஸ்கே எடுத்து ஆட்டத்தை மாற்றியது. ஆனால் அதன்பின்தான் அடுத்தடுத்து பல கேட்சுகளை சிஎஸ்கே மிஸ் செய்தது. படிதார் அடித்த பந்து, கோலி அடித்தது என்று மாறி மாறி சிஎஸ்கே கேட்சுகளை மிஸ் செய்தது. ராகுல் திரிப்பாதி, தீபக் ஹூடா என்று நல்ல பீல்டர்கள் கூட இன்று கேட்சை மிஸ் செய்தனர்.
15 பந்துகளில் 3 முறை சிஎஸ்கே கேட்சை மிஸ் செய்தது அணிக்கு பெரிய பிரஷர் கொடுக்கும் விதத்தில் மாறியது. நேரடியாக போல்ட் எடுத்தால்தான் உண்டு என்று சொல்லும் அளவிற்கு மோசமாக ஆட்டம் மாறியது. தொடக்கத்திலேயே அவுட் ஆக வேண்டிய படிதார் இதனால் சிஎஸ்கே அணியின் ஸ்பின் பவுலிங்கை பிரித்து எடுக்க தொடங்கினார். பீல்டிங் கோச் யாருப்பா என்று கேட்கும் அளவிற்கு அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது.
இலக்கு என்ன
ஒரு பக்கம் படிதார் எளிதாக அரைசதம் அடித்தார். கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து கொஞ்சம் விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது. முக்கியமாக முதல் இன்னிங்சில் கடைசி 3 ஓவர்களில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டால் சிஎஸ்கே ஆட்டத்திற்குள் வந்தது. அதிலும் பதிரானாவின் 19வது ஓவரில் 1 ரன், 2 விக்கெட் எடுக்கப்பட்டது. இதனால் பெங்களூர் அணி 20 ஓவரில் விக்கெட்டுக்கு ரன்கள் எடுத்தது.
இரண்டு அணி விவரம்
சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, சாம் குர்ரன், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (வி), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, மதீஷா பத்திரனா, கலீல் அகமது ஆகியோர் உள்ளனர்.
இன்னொரு பக்கம் பெங்களூர் அணியில் விராட் கோலி, பிலிப் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (வி), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள் ஆகியோர் உள்ளனர்.












Click it and Unblock the Notifications