விடிந்தால் கல்யாணம்.. ஆனால் வேறு பெண்ணுடன் படுக்கையில் இருந்த ஸ்மிருதியின் எக்ஸ் காதலன்.. தோழி பகீர்
மும்பை: இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் முன்னாள் காதலரான பலஷ் முச்சல் திருமணத்திற்கு முதல் நாள் வேறொரு பெண்ணுடன் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தெரிய வந்தபின் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் அனைவரும் சேர்ந்து பலஷ் முச்சலை அடித்து துவைத்திருக்கின்றனர். இதனை ஸ்மிருதி மந்தனாவின் சிறுவயது தோழி உறுதி செய்திருக்கிறார்.
இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இவர் இசையமைப்பாளர் பல்ஷ் முச்சல் என்பவருடன் 2019ஆம் ஆண்டு முதல் காதலில் இருந்தார். இவர்களின் காதல் உறவு பலருக்கும் தெரிய வந்த நிலையில், பொது வெளியிலும் ஸ்மிருதி மந்தனா தங்களின் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இதையடுத்து உலகக்கோப்பை தொடருக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

அதற்கு முன்பாக மும்பையின் டிஒய் பாட்டில் மைதானத்தில் வைத்து ஸ்மிருதி மந்தனாவின் நிச்சயதார்த்த மோதிரத்தை பலஷ் முச்சல் அணிவித்தார். இதன் வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகியது. இதன்பின் நவம்பர் 23ஆம் தேதி ஸ்மிருதி மந்தனா - பலஷ் முச்சல் ஆகியோரின் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நவம்பர் 22ஆம் தேதி இரவு திருமணம் நிறுத்தப்பட்டது.
இரு வீட்டார் தரப்பில் உடல்நிலை காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில் தனது திருமணத்தை ரத்து செய்வதாக ஸ்மிருதி மந்தனா அறிவித்தார். அதற்கான காரணங்கள் எதையும் ஸ்மிருதி மந்தனா வெளியிடவில்லை. என் சொந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். இதனால் பலஷ் முச்சல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் திருமணம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து ஸ்மிருதி மந்தனாவிப்ன் சிறுவயது தோழி வித்ஞான் மானே என்பவர் பேசி இருக்கிறார். அதில் மானே கூறுகையில், ஸ்மிருதி மந்தனா - பலஷ் முச்சல் ஆகியோரின் திருமண கொண்டாட்டத்தின் போது நானும் அங்குதான் இருந்தேன். பலஷ் முச்சல் வேறொரு பெண்ணுடன் படுக்கையில் இருந்த போது, கையும் களவுமான பிடிபட்டார்.
இதனால் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் பலஷ் முச்சலை துவைத்துவிட்டனர். ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருந்தது. நாங்கள் அனைவரும் ஸ்மிருதி மந்தனா இன்னும் சில மணி நேரத்தில் திருமணம் செய்து கொண்டு சாங்லி நகரில் செட்டிலாக போகிறார் என்று நினைத்திருந்தோம். ஆனால் சில நிமிடங்கள் ஒட்டுமொத்த காட்சிகளும் மாறிவிட்டது.
ஸ்மிருதி மந்தனாவின் குடும்பம் மூலமாகவே பலஷ் முச்சலை அறிவேன். ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ரத்து செய்யப்பட்டது எனக்கும் ஒரு பிரச்சனை தான். ஏனென்றால் பலஷ் முச்சல் மூலமாக சினிமாவில் முதலீடு செய்திருந்தேன். சுமார் ரூ.40 லட்சம் அவர்களிடம் கொடுத்திருந்தேன். ஆனால் திருமணம் நின்றுபோன பின், கடந்த மாதம் பலஷ் முச்சலின் தாய் என்னை அழைத்தார்
அப்போது படத்தின் பட்ஜெட் ரூ.1.5 கோடியாக அதிகரித்துவிட்டது. அதனால் கூடுதலாக ரூ.10 லட்சம் கொடு.. இல்லையென்றால் எந்தப் பணமும் உனக்கு கிடைக்காது என்று மிரட்ட தொடங்கிவிட்டனர். படத்தில் இருந்தும் என்னை வெளியேற்றுவிடுவேன் என்றனர். இதனால் பயந்து கொண்டு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளேன்.
திருமணம் நின்றுபோன பின் பலஷ் முச்சல் குடும்பத்தினர் என்னை பிளாக் செய்துவிட்டனர். பலஷ் முச்சலுக்கு பணம் கொடுத்ததற்கான அத்தனை ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. சினிமா நடிகர்களுக்கு கூட அவர்கள் ஊதியத்தை முறையாக கொடுக்கவில்லை. தேவையென்றால் ஆதாரங்களையும் வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications