சென்னையில் மார்ச் 22ல் அணி தேர்வு.. தமிழ்நாடு ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழ்நாடு ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி திருச்சியில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் மண்டல வாரியாக அணிகள் பங்கேற்று வரும் சூழலில் சென்னை மண்டலத்துக்கான அணிகளின் தேர்வு என்பது மார்ச் 22ம் தேதி நடைபெற உள்ளது.

ஐபிஎல் எனும் இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் டிஎன்பிஎல் எனும் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளை போல் தமிழ்நாட்டில், தமிழ்நாடு ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியை ஸ்ட்ரீட் கிரிக்கெட் டெவலப்மென்ட் ஃபெடரேஷன் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.

tspl cricket

இந்த கிரிக்கெட் போட்டி என்பது டென்னிஸ் பால் மூலம் விளையாடப்பட்டு வருகிறது. ஸ்ட்ரீட் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையிலும், ஸ்ட்ரீட் கிரிக்கெட் அணி வீரர்களின் திறமையை நிரூபிக்கும் வகையிலும் இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த போட்டி என்பது 10 ஓவர்களை கொண்டது. அதாவது டி10 போட்டியாக டென்னிஸ் பால் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் போட்டி மார்ச் 5ம் தேதி தொடங்கியது. திருச்சியில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் போட்டி தொடங்கியது. இங்கு ஏற்கனவே 32 ‛நாக்-அவுட்' போட்டிகள் நடந்து முடிந்தன. 6 மண்டலங்களுக்கான நாக்அவுட் போட்டியின் முதல் போட்டி மார்ச் 8 ம் தேதி நடந்தது. அதில் தொட்டியம் பாய்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதன் தொடர்ச்சியாக 2 வது மண்டலத்துக்கான அணி தேர்வு தொடர்பான போட்டி என்பது மார்ச் 22ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை பிபி இன்ஜினியரிங் கல்லூரியில் இந்த போட்டி நடக்கிறது. இதில் வெல்லும் அணி நாக்அவுட் போட்டியில் பங்கேற்கும். 2வது மண்டலத்துக்கான நாக்அவுட் போட்டி ஏப்ரல் 3ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு பயிற்சி மற்றும் கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். அதுமட்டுமின்றி வீரர்களின் ஏலத்திலும் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும். போட்டியின் இறுதியில் மொத்தம் 8 அணிகள் தேர்வு செய்யப்படும். ஒவ்வொரு அணியும் 15 வீரர்களை கொண்டதாக இருக்கும். இறுதி போட்டி என்பது மே மாதம் கடைசி வாரத்தில் நடக்கும்.

தற்போது இந்த போட்டிக்கான TSPL Anthem வெளியிடப்பட்டுள்ளது. இது இணையதளத்தில் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த போட்டி தற்போது தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் போட்டியை ரசிக்க தொடங்கி உள்ளனர். இதனால் வரும் காலத்தில் தமிழ்நாடு ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் போட்டிக்கும் அதிகமான ரசிகர்கள் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+