மீண்டும் அவமானப்பட்ட பாகிஸ்தான்.. தி ஹண்ட்ரட் தொடரில் ஒரு பாகிஸ்தான் வீரர் கூட ஏலம் போகலையாம்!
லண்டன்: நம்ம ஊர் ஐபிஎல் போட்டிகளைப் போலவே லண்டனில் தி ஹண்ட்ரட் என்ற கிரிகெட் தொடர் நடைபெறும். இதற்கான ஏலம் சமீபத்தில் நடந்த நிலையில், அதில் இருந்த 8 அணிகளில் யாருமே பாகிஸ்தான் அணி வீரர்களை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. மொத்தம் 50 வீரர், வீராங்கனைகள் ஏலத்தில் பதிவு செய்திருந்த போதிலும், அதில் ஒருவர் கூட ஏலம் போகவில்லை.
சர்வதேச அளவில் இப்போது கிரிக்கெட் தொடர்கள் மாறி வருகிறது. முன்பெல்லாம் சர்வதேச நாடுகளுக்கு இடையே மட்டுமே போட்டிகள் நடைபெறும். ஆனால், ஐபிஎல் வருகை என்பதை அதை மாற்றிக் காட்டியது. ஐபிஎல் மிக பெரிய ஹிட் அடித்து, கிரிக்கெட் உலகையே புரட்டிப் போட்டது. அதன் பிறகு உலகின் பல்வேறு நாடுகளும் தங்களுக்குச் சொந்தமான லீக் போட்டிகளை நடத்தத் தொடங்கின.

தி ஹண்ட்ரட்
இதில் பிரிட்டன் நடத்தும் தி ஹண்ட்ரட் தொடருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. அதுவும் ஐபிஎல் போட்டியைப் போலத் தான் என்றாலும் ரூல்ஸ்கள் சற்று மாறுபட்டு இருக்கும். டி20 போட்டிகளை விட 20 பந்துகள் குறைவாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு நிமிடமும் போட்டியில் அனல் பறக்கும். இந்த தொடருக்கும் ஐபிஎல் போட்டிகளைப் போலவே தனியாக ஏலம் நடக்கும்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்ற நாடுகளின் தொடர்களில் பங்கேற்கக்கூடாது என்ற விதி இருப்பதால் இதில் இதில் இந்திய வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள். அதேநேரம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இந்த ஏலத்தில் பங்கேற்பார்கள். இதில் தான் பாகிஸ்தான் வீரர்கள் அசிங்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் வீரர்கள்
அதாவது தி ஹண்ட்ரட் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு தரப்புக்கும் நடக்கும். இரண்டிலும் ஏலம் நடைபெறும் நிலையில், அதில் பங்கேற்க 45 வீரர்களும், 5 வீராங்கனைகளும் பதிவு செய்துள்ளனர். இதில் விஷயம் என்னவென்றால் இந்த 50 பேரில் ஒருவர் கூட ஏலம் போகவில்லையாம். பெண்கள் பிரிவில் வீராங்கனைகள் குறைவாக இருந்த போதிலும் பாகிஸ்தான் வீராங்கனைகள் யாரும் ஏலம் போகவில்லை.
ஏலம் போகல
அதேபோல ஆண்கள் பிரிவில் இமாத் வாசிம், சைம் அயூப், ஷதாப் கான் மற்றும் ஹசன் அலி என பாகிஸ்தான் தேசிய அணியின் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இருந்த போதிலும் ஒருவர் கூட ஏலம் போகவில்லை. தி ஹண்ட்ரட் தொடரில் மொத்தம் 8 அணிகள் உள்ள நிலையில், அதில் எந்தவொரு அணியும் பாகிஸ்தான் வீரர்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை.
மீண்டும் அவமானப்பட்ட பாகிஸ்தான்
ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்திய பாகிஸ்தான் அணி, அதில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் க்ரூப் சுற்றுடன் வெளியேறியது.. தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான், 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை எதிர்கொண்டது. அதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
கடைசி போட்டி ராவல்பிண்டியில் நடந்த நிலையில், அதில் ஆப்கானிஸ்தான் அணியைப் பாகிஸ்தான் எதிர்கொள்ள இருந்தது. இருப்பினும், அந்த போட்டியும் மழையால் கைவிடப்பட்டது. இதனால் ஒரு போட்டியில் கூட வெல்லாமலேயே பாகிஸ்தான் வெளியேறியது. இந்தச் சூழலில் தான் இப்போது பாகிஸ்தான் வீரர்களையும் தி ஹண்ட்ரட் தொடரில் யாரும் ஏலம் எடுக்காமல் விட்டுள்ளனர்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications