42 ரன்கள் மட்டும்தான்.. லைப் டைம் ரெக்கார்ட் காலியாக போகுது.. விராட் கோலிக்கு கிடைத்த தரமான சான்ஸ்!
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு பிரம்மாண்ட சாதனையை படைக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் விராட் கோலி 2வது இடத்திற்கு முன்னேற இன்னும் 42 ரன்கள் மட்டுமே தேவையாக இருக்கிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை வதோதராவில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில், அனைவரின் எதிர்பார்ப்பும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆட்டத்தின் மீது குவிந்துள்ளது.

இந்த நிலையில் விராட் கோலிக்கு நாளைய ஆட்டத்தில் மிகப்பெரிய சாதனையை படைக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 782 இன்னிங்ஸ்களில் விளையாடி 34,357 ரன்களை விளாசி இருக்கிறார்.
இவருக்கு பின் 2வது இடத்தில் இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரா 666 இன்னிங்ஸ்களில் விளையாடி 28,016 ரன்களை குவித்துள்ளார். தற்போது விராட் கோலிக்கு சங்கக்காராவின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை விராட் கோலி 623 இன்னிங்ஸ்களில் விளையாடி 27,975 ரன்களை குவித்திருக்கிறார்.
இன்னும் 42 ரன்களை எடுத்தால், சங்கக்காராவின் சாதனையை எளிதாக முறியடிக்க முடியும். அதேபோல் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து விராட் கோலி 93 ரன்களை கடந்தால், சச்சின் டெண்டுல்கரின் முக்கியமான சாதனையையும் முறியடிக்க முடியும். இதுவரை நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 41 இன்னிங்ஸ்களில் 1,750 ரன்களை சேர்த்துள்ளார்.
தற்போது விராட் கோலி 33 இன்னிங்ஸ்களில் 1,657 ரன்களை சேர்த்து இருக்கிறார். இதனால் விராட் கோலி இந்த இரு சாதனைகளையும் எளிதாக முறியடிப்பார் என்று பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் இழந்தது. அதற்கான பதிலடியும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications