For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"போர்க்குற்றவாளிகள்" 6 ஆயிரம் பேர் பட்டியலை படங்களுடன் வெளியிட்டது பிரித்தானியா தமிழர் அமைப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் தமிழின படுகொலையை நடத்திய இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த 6 ஆயிரம் பேரின் பட்டியலை அவர்களது குடும்ப புகைப்படங்களுடன் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது பிரித்தானியா தமிழர் ஒன்றியம்.

ஜெனிவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இலங்கை மீதான போர்க்குற்றம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த இருக்கிறது.

BTF releases SL war criminals list

இதனால் அதிர்ச்சி அடைந்த இலங்கை அரசு அதிரடியாக வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்கள் அத்தனையையும் தடை செய்து பயங்கரவாத இயக்கங்களாக அறிவித்தது. அத்துடன் அதன் நிர்வாகிகளையும் பயங்கரவாதிகளாக அறிவித்து இண்டர் போல் போலீஸிடம் முறையிட்டது.

BTF releases SL war criminals list

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரித்தானிய தமிழர் ஒன்றியம் நேற்று சுமார் 6 ஆயிரம் இலங்கை ராணுவத்தினர் படம், அவர்களது குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு இவர்கள் அனைவருமே போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்தியுள்ளது.

மேலும் இந்த ராணுவத்தினர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச சமூகத்திடம் புகார் அளிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆழியன் கூறுகையில், வெளியிடப்பட்ட போர்க்குற்றவாளிகள் பற்றிய ஆதாரங்களை ஐநா போன்ற அமைப்புகளுக்குத் தர இருக்கிறோம்.

BTF releases SL war criminals list

ராணுவத்தினர் போர்முனைக்கு அனுப்பப்படும்போது, அரசு, அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து கௌரவித்து அனுப்பியது. இந்தப் படையினர் போர்முனையில் என்ன குற்றங்களை இழைத்தார்கள் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். அதனால்தான் குடும்பத்தினருடைய படங்களையும் பிரசுரித்தோம் என்கிறார்.

ஆயிரம் பேரின் முழுப் பட்டியல் இங்கே

/common/documents/britian-tamil-union-1.pdf

/common/documents/britian-tamil-union-2.pdf

English summary
British Tamil Forum released Srilankan war criminals list with their family photos.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X