கொழும்பில் சீன உளவு கப்பல்.. எதிர்ப்பை மீறி இந்தியாவுக்கு ரணில் விக்கிரமசிங்கே பச்சை துரோகம்!
கொழும்பு: இந்தியாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி சீனாவின் ஆராய்ச்சி என்ற பெயரிலான உளவு கப்பல் இலங்கை தலைநகர் கொழும்பை வந்தடைந்துள்ளது.
கடல்சார் ஆராய்ச்சி என்ற பெயரில் இந்தியாவை அதிநவீன உளவு கருவிகள் மூலம் இலங்கையில் இருந்து உளவு பார்ப்பது, கண்காணிப்பது என்பது சீனாவின் தொடர் நடவடிக்கையாக இருந்து வருகிறது. இதற்கு இலங்கை அரசும் உடந்தையாக இருக்கிறது.

இலங்கை பொருளாதார பேரழிவில் சிக்கி நடுத்தெருவில் நின்று அதிபர், பிரதமர் பதவி விலக வேண்டிய புரட்சி ஏற்பட்டது. அப்போது இந்தியாதான் நல்லெண்ண அடிப்படையில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனுதவி கொடுத்தது. ஆனால் சீனாவோ அப்போதும் குறுகிய கால கடன்களை கொடுத்து இலங்கையின் நிலப்பரப்பை அபகரிப்பதில் முனைப்பாக இருந்தது. இன்றளவும் இலங்கைக்கு இந்தியாதான் பேருதவி செய்து வருகிறது.
இலங்கை சிங்கள ஆட்சியர் எப்போதும் இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதை கொள்கையாக வைத்திருப்பர். இதனை தற்போது இந்தியாவுக்கு வந்து கடனுதவி பெற்று சென்ற ரணில் விக்கிரமசிங்கேவும் நிரூபித்துள்ளார். இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் ஷி யான் 6 எனும் உளவு கப்பலை கொழும்பில் நிறுத்துவதற்கு அனுமதி கொடுத்துள்ளார் ரணில் விக்கிரமசிங்கே. கடல்சார் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறோம் என்கிற பொய் காரணத்துடன் இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது சீன உளவு கப்பல்.
80 நாட்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து புறப்பட்டது இந்த கப்பல். இந்திய பெருங்கடல் பகுதியில் முகாமிட்டு பல்வேறு உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டது இந்த சீன கப்பல். இதனைத் தொடர்ந்து இலங்கைக்குள் கடந்த மாதமே நுழைய திட்டமிட்டிருந்தது இக்கப்பல். ஆனால் இந்திய தரப்பில் மிக கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் இலங்கைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து சீன உளவு கப்பலின் இலங்கை வருகை தாமதமானது.
இதனிடையே திடீரென சீனாவின் உளவு கப்பலுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அனுமதி கொடுத்தார். இதனால் உடனடியாக கொழும்பு துறைமுகத்துக்குள் நுழைந்து நங்கூரமிட்டு நிற்கிறது சீனாவின் உளவு கப்பல். கொழும்பு துறைமுகத்தில் இருந்த படியே இந்தியாவை கண்காணிக்கும் பணிகளை சீனாவின் உளவு கப்பல் மேற்கொள்ள இருக்கிறது. இலங்கையின் இந்த பச்சை துரோகம் நமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications