For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை சட்டப்படி நீக்கப்பட்டுள்ளது: ஐரோப்பிய ஒன்றியம்

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை எதிர்த்து ஐரோப்பிய பொதுநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.

European Union defends lifting sanctions on Sri Lankan rebels

பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு இலங்கை கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கம் என்பது நீதிமன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. இது அரசியல் முடிவு அல்ல என்று விளக்கம் அளித்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

English summary
The European Union (EU) Tuesday said that lifting sanctions imposed on Sri Lanka's Tamil Tiger rebels is not a political decision taken by the EU but a legal ruling of a court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X