புலிகளை திருப்திப்படுத்தும் விதத்தில் செயல்படுகிறாராம் கேமரூன்- சொல்கிறார் கோத்தபாய!
Subscribe to Oneindia Tamil

கேமரூனின் செயற்பாடு, பிரிட்டனில் உள்ள உலக தமிழர் பேரவை மற்றும் பிரிட்டன் தமிழர் பேரவை ஆகியவற்றின் பின்னணியில் அமைந்திருப்பதாகவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டுக்காக இலங்கை வருவதற்கு முன்னர் பிரிட்டிஷ் பிரதமரின் குழுவினரை, அந்நாட்டில் உள்ள தமிழ் குழுக்கள் சந்தித்ததையும் கோத்தபாய சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் மற்றும் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டே செயற்படுகின்றனர். கேமரூனின் இலங்கைப் பயணும் அதன் பின்னணியில் அமைந்ததே என்றும், போர்க் குற்றம் தொடர்பில் கேமரூனின் எச்சரிக்கை, இலங்கை இன்னும் பிரிட்டிஷ் ஆளுகைக்குள் இருப்பதை போன்ற நிலைமையை தோற்றுவித்திருப்பதாகவும் கோத்தபாய குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications