For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகத் தமிழர்கள் மாவீரர்கள் தினம் அனுஷ்டிப்பு

ஈழத்திலும், உலகின் பல பகுதிகளிலும் இன்று தமிழர்கள் மாவீரர் தினத்தை அனுஷ்டித்தனர்.

By Siva
Google Oneindia Tamil News

கொழும்பு: உலகத் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக ஈழத் தமிழர்கள் இன்று மாவீரர்கள் தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமையே மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு விட்டது. பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் திரண்டு ஈழப் போரில் உயிர்நீத்த விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி ஏஞ்சலி செலுத்தினர்.

Hero's day observed in various countries

ஆண்டுதோறும் நவம்பர் 27ம் தேதி விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாரனின் உத்தரவின் பேரில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. இறுதிக் கட்ட ஈழப் போருக்குப் பின்னர் அது ஈழத்தில் தடை செய்யப்பட்டது. இலங்கை அரசின் தடையால் மாவீரர்கள் தினம் முன்பு போல அனுஷ்டிக்கப்படுவதில்லை என்ற போதிலும் தடையைத் தாண்டியும் அங்கு நடைபெற்றே வருகிறது.

இதற்கிடையே, உலகின் பல்வேறு நாடுகளிலும் மாவீரர்கள் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. பிரான்ஸில் இன்று பிற்பகல் மாவீரர் தின நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Maveerar Dhinam or Hero's day was observed in various countries including Eelam. People remembered their beloved ones' death in the Eelam war.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X