இருமடங்கான கொரோனா.. இலங்கையில் அடுத்த 10 நாட்களுக்கு முழு லாக்டவுன் அறிவிப்பு
இலங்கை: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் அடுத்த 10 நாட்கள் இலங்கையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை கடுமையாக உயர்ந்ததால் இலங்கை அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.
இலங்கையில் புதன்கிழமை அன்று அதிகபட்ச ஒற்றை நாள் இறப்பு எண்ணிக்கை 187 ஆக உயர்ந்தது. அதேபோல் ஒரே நாள் கேஸ் எண்ணிக்கை 3,793 ஆக அதிகரித்தது. தினசரி பாதிப்புகள் ஒரு மாதத்தில் சராசரியாக 3,897 ஆக அதாவது இருமடங்காக அதிகரித்துள்ளது.
இதனால் 3.2 கோடி மக்கள் வாழும் இலங்கையில் மருத்துவமனைகள் கோவிட் -19 நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகள், சுகாதார அமைப்புகள் கொரோனா பாதிப்பை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன.

ஊரடங்கு
இதையடுத்து மருத்துவ வல்லுநர்கள், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வணிகர்கள் தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்க உடனடியாக நாடு தழுவிய பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அழைப்பு விடுத்தனர்.

நாட்டுக்கு நல்லது
இலங்கை சட்ட அமைச்சரான திஸ்ஸா விதாரணா, கடுமையான ஊரடங்கு மூலம் கொரோனாவை தடுக்க முடியும் என்றும் நம்பவுர். இவர்
அரசு எங்கள் பேச்சைக் கேட்டால் அது எங்கள் தலைவர்களுக்கும் நாட்டிற்கும் நல்லது" என்று கூறியிருந்தார்.

சுகாதார அமைச்சர்
இந்நிலையில் "இன்று (20/08) இரவு 10 மணி முதல் திங்கள் (30/08) வரை நாடு தழுவிய லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம் போல் செயல்படும்" என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கோத்தபய ராஜபக்ஷ
அதிபர் கோத்தபய ராஜபக்ஷ கொரோனா வைரஸ் தொடர்பான அதிபர் மாளிகை பணிக்குழு உறுப்பினர்களைச் சந்தித்து ஆலோசித்து விட்டு, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல விஷயங்களுக்கு தடை
தற்போதைய நிலையில் பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன. திருமணங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல கட்டுப்பாடுகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. அதிகாரிகள் ஏற்கனவே கடந்த திங்கள்கிழமை முதல் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தனர். தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சினோபார்ம்
இலங்கையின் மக்கள்தொகையில் கால் பகுதியினர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஃபைசர் , மாடர்னா , AstraZeneca மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை இலங்கை அங்கீகரித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவியதில் இருந்து மொத்தம் 372,079 பேர் இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 6,604 பேர் அங்கு இதுவரை பலியாகி உள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications