For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 60% வாக்குப் பதிவு... எண்ணும் பணி தொடங்கியது

Google Oneindia Tamil News

கொழும்பு : இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்து வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெற்றது.

srilanka

முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது என தேர்தல் அதிகாரி வேதநாயகன் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இரண்டு கட்டங்களாக முடிவுகள் வெளியிடப்படும் என்று இலங்கையின் தலைமை தேர்தல் செயலகம் அறிவித்து இருக்கிறது.

அதன்படி மாலையில் வாக்குப் பதிவு முடிந்தபிறகு முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மாலை 6 மணிக்கு தொடங்கிய தபால் வாக்குகள் எண்ணும் பணி நள்ளிரவு 11 மணிக்குள் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும். இதைத் தொடர்ந்து தொகுதி வாரியாக வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த முடிவுகள் நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதல் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் செயலகம் தெரிவித்து இருக்கிறது.

இத்தேர்தலில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணிக்கும், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த கூட்டணி சார்பில்தான் ராஜபக்சே போட்டியிடுகிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன.

English summary
Sri Lanka's parliamentary elections on Monday ended without any major incident and countin begins
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X