For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துப்பாக்கி சூடு வழக்கு.. அமைச்சர் அர்ஜுனா ரணதுங்கா கைது.. சிறிசேனா அதிரடி!

இலங்கை பெட்ரோலிய துறை அமைச்சர் அர்ஜுனா ரணதுங்கா அதிபர் சிறிசேனாவின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை பெட்ரோலிய துறை அமைச்சர் அர்ஜுனா ரணதுங்கா அதிபர் சிறிசேனாவின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இலங்கை தலைநகர் கொழும்புவில் அந்நாட்டு அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாவலர்கள் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அர்ஜுனா ரணதுங்கா பெட்ரோலிய துறை அமைச்சராக உள்ளார்.

Sri Lankan minister Arjuna Ranatunga arrested by police

இவர் சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சில ஆவணங்களை எடுக்க சென்ற போது இந்த அசம்பாவிதம் நடந்தது. அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாவலர்க பாதுகாவலர்கள் அங்கிருந்த பணியாளர்கள் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் இரண்டு பேர் காயமடைந்தனர்.

இதில் ஒருவர் பலியானார். இந்த நிலையில் அமைச்சர் அர்ஜுனா ரணதுங்கா அதிபர் சிறிசேனாவின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

[உயிருக்கு பயம்.. அதிரடி படை உடை அணிந்து தப்பித்த இலங்கை அமைச்சர் ரணதுங்கா.. திடுக் தகவல்!]

நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றே அவரது பாதுகாவலர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை பெட்ரோலிய அமைச்சகத்துக்குள் நுழைய முயன்ற போது ரணதுங்கா கைது செய்யப்பட்டார். அங்கு நிறைய அரசியல் குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், இந்த கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Sri Lankan minister Arjuna Ranatunga arrested by police over the shooting took place yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X