“அட.. போதைல ரேப் பண்றதெல்லாம் சாதாரணம்..” - அடுத்தடுத்து சர்ச்சை - அமைச்சர் பதவி பறிபோகுமா?
அமராவதி: ஆந்திர பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் புதிதாக உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பெண் அமைச்சர் பாலியல் வன்கொடுமை குறித்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
இந்த வாரத்திலேயே இரண்டு முறை அந்த பெண் அமைச்சர் சர்ச்சையில் சிக்கியுள்ளதால் பதவி பறிபோகுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

இளம்பெண் பலாத்காரம்
ஆந்திர பிரதேச மாநிலம் விஜய நகரத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவரின் தாய் டீக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அதிகாலை 3 மணிக்கு அவர் டீக்கடைக்கு சென்றுவிடுவார். இதை கவனித்த அதே பகுதியை சேர்ந்த போலீஸ்காரரின் மகன் செர்ரி (19) மதுபோதையில் வந்து கதவைத் தட்டியுள்ளார்.
அந்த இளம்பெண் கதவைத் திறந்தவுடன் உள்ளே சென்ற செர்ரி இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் தனது தாய்க்கு போனில் கூறியுள்ளார். பின்னர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பெண் அமைச்சரிடம் கேள்வி
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாய் போலீசில் புகார் கொடுத்தார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் தானேடி வனிதா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆந்திராவில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என உள்துறை அமைச்சர் தானேடி வனிதாவிடம் கேட்டுள்ளனர்.

அமைச்சர் சொன்ன பதில்
அதற்கு அமைச்சர் வனிதா, ஆண்கள் யாருக்கும் பெண்களை பலாத்காரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவர்கள் மது அருந்துவதால் அவர்களுடைய மனநிலை தவறுகிறது. அதனால்தான் பலாத்காரம் நடைபெறுகிறது.
பெண்கள் நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒரு சில தாய்மார்கள் தங்கள் மகள்களை சரிவர வளர்க்காததால் தான் சில இடங்களில் தவறு நடக்கிறது. மதுபோதையில் பலாத்காரம் நடப்பது சகஜமான ஒன்றுதான் என பதில் அளித்துள்ளார்.

மற்றொரு பலாத்கார சம்பவம்
சமீபத்தில், ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள ரெபல்லே நகர் ரயில் நிலையத்தில் கணவன், கர்ப்பிணி மனைவி மற்றும் 3 குழந்தைகள் என குடும்பத்துடன் ரயிலுக்காக காத்திருந்துள்ளனர்.
அந்த வழியாக கடுமையான குடிபோதையில் வந்த 3 பேர், கர்ப்பிணி பெண்ணின் கணவரிடம் பணம் கேட்டு மிரட்டி தகராறு செய்துள்ளனர். அவர் பணம் இல்லை எனக் கூறியதால் அவர்களை தாக்கியுள்ளனர்.
கணவரை விட்டுவிடும்படி கர்ப்பிணி பெண் அவர்களிடம் கெஞ்சி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் கர்ப்பிணி பெண்ணை இழுத்துச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

குறுக்க வந்ததுதான் தப்பு
இந்தச் சம்பவம் தொடர்பாக பேசியுள்ள அமைச்சர் தானேடி வனிதா, "இந்த பாலியல் வன்புணர்வு சம்பவத்திற்கும் ரயில்வே போலிஸ் பற்றாக்குறைக்கும் தொடர்பு இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்வதற்காக அங்கு வரவில்லை.
கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு அவர்கள் அந்த பெண்ணின் கணவரிடம் தகராறு செய்த போது அந்தப் பெண் குறுக்கிட்டதால் இச்சம்பவம் நடைப்பெற்றுள்ளது. மது போதையில் இருக்கும்போது சில விஷயங்கள் எதிர்பாராத விதமாக நடக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

பதவி பறிபோகுமா
பெண் அமைச்சரின் இந்தப் பதில் ஆந்திராவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் உள்துறை அமைச்சராக இருப்பவர் இதுபோல பிற்போக்குத் தனமாகக் கருத்து தெரிவிப்பதா என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனால், புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்ற வனிதாவின் பதவி பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வனிதா முன்னதாக பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தார். சமீபத்தில் அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்டபோது உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications