ஏன் அனைத்து எம்எல்ஏக்களும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை? அமைச்சர் விளக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு- வீடியோ

  சென்னை: எம்எல்ஏக்கள் பலர் சபரிமலைக்கு சென்றிருப்பதாலும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாலும் கூட்டத்தில் பகேற்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

  வரும் 8 ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

  சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

  அசைத்து பார்க்க முடியாது

  அசைத்து பார்க்க முடியாது

  அப்போது சட்டசபை தொகுதி பிரச்சனைகள் குறித்து பேச அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூடியதாக அவர் கூறினார். அதிமுகவை யாராலும் அசைத்து பார்க்க முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

  கவிழ்க்க முடியாது

  கவிழ்க்க முடியாது

  டி.டி.வி தினகரன் சட்டசபைக்கு வருவதால் எந்த மாற்றமும் நிகழ போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளால் ஆட்சியை கவிழ்க்கவோ ஆட்சிக்கு ஊறுவிளைவிக்கவோ முடியாது என்றும் ஜெயக்குமார் கூறினார்.

  ஜெ. ஆட்சி தொடர..

  ஜெ. ஆட்சி தொடர..

  அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் அவர் கூறினார். ஜெயலலிதாவின் அரசு தொடரவேண்டும் என்பதில் அதிமுக உறுப்பினர்கள் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

  அமைச்சர் விளக்கம்

  அமைச்சர் விளக்கம்

  மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 104 எம்எல்ஏக்கள் பங்கேற்றதாக அவர் கூறினார். சபரிமலை சென்றதாலும், உடல்நலக்குறைவாலும், சிலர் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றதாலும்தான் முழு அளவில் வரவில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Minister Jayakumar says TTV dinakaran arrival to Assembly will not creat any impact. Jayakumar says 104 MLAs participated in the MLAs meeting. He explained why all the MLAs did not participate in the meeting.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X