For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொங்கல் கொண்டாட சொந்த ஊர் போறீங்களா?... உங்களுக்காகவே ஸ்பெஷலாக.. 12,624 பஸ்கள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக சென்னை கோயம்பேட்டில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களில் இருந்து பிற இடங்களுக்கும் மொத்தம் 12,624 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

"தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில், அவர்கள் சிரமம் ஏதுமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் பொங்கல் பண்டிகையின் போது கடந்த நான்கு ஆண்டுகளாக இயக்கப்படுகின்றன.

12,624 Special buses for Pongal festival

இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு 9.1.2016 அன்று 482 சிறப்புப் பேருந்துகள், 10.1.2016 அன்று 504 சிறப்புப் பேருந்துகள், 11.1.2016 அன்று 365 சிறப்புப் பேருந்துகள், 12.1.2016 அன்று 539 சிறப்புப் பேருந்துகள், 13.1.2016 அன்று 1,345 சிறப்புப் பேருந்துகள், 14.1.2016 அன்று 1,447 சிறப்புப் பேருந்துகள் என 9.1.2016 முதல் 14.1.2016 வரை மொத்தம் 4,682 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இது தவிர மாநிலத்தின் மற்ற முக்கிய ஊர்களிலிருந்து 9.1.2016 அன்று 516 சிறப்புப் பேருந்துகள், 10.1.2016 அன்று 608 சிறப்புப் பேருந்துகள், 11.1.2016 அன்று 621 சிறப்புப் பேருந்துகள், 12.1.2016 அன்று 892 சிறப்புப் பேருந்துகள், 13.1.2016 அன்று 2,080 சிறப்புப் பேருந்துகள், 14.1.2016 அன்று 3,225 சிறப்புப் பேருந்துகள் என 9.1.2016 முதல் 14.1.2016 வரை மொத்தம் 7,942 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

மொத்தத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, 9.1.2016 முதல் 14.1.2016 வரை 12,624 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இதேபோன்று, பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பேருந்துகள் 15.1.2016 முதல் 19.1.2016 வரை இயக்கப்படும்.

மேலும், மேற்காணும் நாட்களில் சென்னை மாநகரில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். காணும் பொங்கல் நாளான 17.1.2016 அன்று மெரினா கடற்கரை, வண்டலூர், மகாபலிபுரம் போன்ற சுற்றுலா இடங்களுக்கு சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் கூடுதலாக 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

25 சிறப்பு முன்பதிவு மையங்கள்

300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை:

தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிப்பதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண் 044-24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது

English summary
To clear the rush of passengers heading to various destinations in view of Pongal festival, Tamil Nadu government today said it would operate over 12, 12,624 special buses starting January 9, 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X