இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்: 12 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

Subscribe to Oneindia Tamil
  மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்-வீடியோ

  இராமேஸ்வரம் : நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதனால் இராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

  இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று உள்ளனர். கட்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கல்வீசி விரட்டி அடித்தனர்.

  12 Tamil Fishermen from Rameshwaram arrested by Srilankan Navy

  அதனைத் தொடர்ந்து நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக சொல்லி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

  கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் யாழ்பாணம் அருகே உள்ள காங்கேசன் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர். இந்த செய்தி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து அச்சுறுத்தி வருகிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவ சமுதாயத்தினர் கோரிக்கை வைத்து உள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  12 Tamil Fishermen from Rameshwaram arrested by Srilankan Navy .All the 12 were taken to Kangesan Port for Further Investigation.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற