சென்னையில் செம மழை... தரமணியில் 19 செ.மீ, தாம்பரத்தில் 18 செமீ பதிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையை மிரட்டிய மழை: குளமான சாலைகள்...ஸ்தம்பித்த வாகனங்கள்- வீடியோ

  சென்னை: சென்னையில் காலை 8.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தரமணியில் 19.3 செமீ மழையும், தாம்பரத்தில் 18 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது.

  தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே மையம் கொண்டு இருந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் மையம் கொண்டு இருப்பதால் சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  180 mm rain in 24 hours in Tambaram

  வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே சென்னையில் நேற்று மழை கொட்டித்தீர்த்தது. நேற்று ஒருநாள் பெய்த மழைக்கு 105 இடங்களில் தண்ணீர் தேங்கியதாக கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சென்னையில் நேற்று பெய்த மழையில் அதிகபட்சமாக தரமணியில் 19.3 செமீ மழையும் ,தாம்பரத்தில் 18 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 17.6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

  சென்னை விமானநிலையம் பகுதியில் 16.9 செமீ மழையும், அம்பத்தூரில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம், புழல் பகுதியில் 14.5 செமீ மழை பதிவாகியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A trough of low pressure over Southwest Bay triggered at least a dozen intense spells on Monday. Tambaram recorded close to 18cm of rainfall and Meenambakkam recorded over 16.9 cm in just 12 hours.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற