தமிழகம் முழுவதும் 23 டி.எஸ்.பிகள், ஏ.எஸ்.பிகளாக பதவி உயர்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் 23 டி.எஸ்.பிகள், ஏ.எஸ்.பிகளாக பதவி உயர்வு அளித்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

25 DSPs promoted as ASPs

ராமநாதபுரம் பயிற்சி பள்ளியில் டி.எஸ்.பியாக இருந்த பிச்சை, திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு பிரிவு கூடுதல் துணை ஆணையராகவும். விழுப்புர மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பியாக இருந்த சுருளிராஜா தேனி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏ.எஸ்.பியாகவும், மதுரை 4வது ஆயுதப்படை உதவி கமண்டோவாக இருந்த சண்முகநாதன் அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பரிவு ஏ.எஸ்.பியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோயம்பத்தூர் மாநகர கட்டுபாட்டு அறை உதவி கமிஷனராக இருந்த முருகசாமி கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பரிவு கூடுதல் துணை கமிஷனராகவும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய டி.எஸ்.பியாக இருந்த ரவி சென்னை மாநகர சி.பி.ஐ.யு கூடுதல் துணை கமிஷனராகவும், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

25 DSPs promoted as ASPs

வேலூர் மாவட்ட காட்பாடி டி.எஸ்.பியாக இருந்த மாணிக்கவேல் சென்னை மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பரிவு கூடுதல் துணை கமிஷனராகவும், கோவை சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய ஏ.எஸ்.பியாக இருந்த குணசேகரன் திருப்பூர் மாவட்ட பிரிவு(1) மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏ.எஸ்.பியாகவும், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மேற்கு மண்டல ஓ.சி.ஐ.யு டி.எஸ்.பியாக இருந்த ராதாகிருஷ்ணன் நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏ.எஸ்.பியாகவும். சென்னை மயிலாப்பூர் உதவி கமிஷ்னராக இருந்த குமார் சென்னை மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் துணை கமிஷனராகவும், சென்னை மாநகர செம்பியம் உதவி கமிஷனராக இருந்த ஜோன் ஜோசப் திருவாரூர் மாவட்ட தலைமையிட ஏ.எஸ்.பியாகவும், திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி டி.எஸ்.பியாக இருந்த கண்ணன் சென்னை போதை தடுப்பு பிரிவு ஏ.எஸ்.பியாகவும் நியமனம்.

25 DSPs promoted as ASPs

நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பியாக இருந்த லோகநாதன் கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏ.எஸ்.பியாகவும், சேலம் ஓமலூர் டி.எஸ்.பியாக இருந்த சந்திரசேகரன் சேலம் தலைமையிட ஏ.எஸ்.பியாகவும் சென்னை அயனாவரம் உதவி கமிஷனராக இருந்த சங்கரன் கன்னியாகுமரி மாவட்ட தலைமையிட ஏ.எஸ்.பியாகவும், வேலூர் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புதுறை ஏ.எஸ்.பியாக இருந்த பாலசுப்பிரமணியன் சென்னை பிரிவு (1) ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புதுறை ஏ.எஸ்.பியாகவும்,

திருச்சி மாநகர சட்ட ஒழுங்கு உதவி கமிஷனராக இருந்த மந்திரமூர்த்தி புதுக்கோட்டை மாவட்ட தலைமையிட ஏ.எஸ்.பியாகவும், கடலூர் மாவட்ட சேத்தியாதோப்பு டி.எஸ்.பியாக இருந்த ஜோஷ் தங்கையா விழுப்புர மாவட்ட தலைமையிட ஏ.எஸ்.பியாகவும், திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பியாக இருந்த வனிதா வேலூர் மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ.எஸ்.பியாகவும், மதுரை மாவட்ட சமய நல்லூர் டி.எஸ்.பியாக இருந்த ராஜாராம் தூத்துத்குடி மாவட்ட மதுவிலக்கு பிரிவு ஏ.எஸ்.பியாகவும், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

25 DSPs promoted as ASPs

சென்னை டேன்ஜெட்கோ டி.எஸ்.பியாக இருந்த குமார் அரியலூர் மாவட்ட தலைமையிட ஏ.எஸ்.பியாகவும், எஸ்.சி.ஆர்.பி கணினி பிரிவு டி.எஸ்.பியாக இருந்த தேவி சென்னை காவலர் கணினி பிரிவு ஏ.எஸ்.பியாகவும், சென்னை சிபி.சிஐடி சைபர் செல் டி.எஸ்.பியாக இருந்த லாவண்யா சென்னை எஸ்.ஐ.டி, சிபி.சிஐடி ஏ.எஸ்.பியாகவும், தூத்துகுடி மாவட்ட வைகுண்ட டி.எஸ்.பியாக இருந்த மாதவன் திருநெல்வேலி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிர்வு ஏ.எஸ்.பியாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In a major reshuffle effected in the Police Department, Additional Superintendent of Police (ASP) were shifted besides promotion of Deputy Superintendent of Police (DSP) of State Police Service on Friday.
Please Wait while comments are loading...