For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்... தமிழக அரசு உத்தரவு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவடைந்து அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆறாவது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில், 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

27 IAS officers transfer in tamilnadu

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

வணிகவரிகள் கமிஷனர் எஸ்.கே.பிரபாகர், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளரும் எரிசக்தித் துறையின் செயலாளருமாக பொறுப்பு வகித்த என்.எஸ்.பழனியப்பன், எரிசக்தித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டார்.

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும், சிட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராகவும் பொறுப்பு வகித்த ஜக் மோகன் சிங் ராஜூ, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரான மங்கத் ராம் சர்மா, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் சிட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரான முழு கூடுதல் பொறுப்பையும் வகிப்பார்.

பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் (பயிற்சி) துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சி.சந்திரமவுலி, வணிக வரிகள் கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகவும் அவர் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

வருவாய்த்துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் செயலாளரானார். வருவாய்த்துறையின் செயலாளராக அவரே முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளரும், நகரமைப்புத் திட்ட கமிஷனருமான ஏ.கார்த்திக், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறையின் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். உயர் கல்வித்துறையின் செயலாளராக ஏ.கார்த்திக் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் மற்றும் நகரமைப்புத் திட்ட கமிஷனருமாக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

உயர் கல்வித்துறையின் செயலாளரும், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் மேலாண்மை இயக்குனர் பொறுப்பில் இருந்த அபூர்வா, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயலாளரும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறையின் செயலாளராகவும் (பொறுப்பு), நிதித்துறையின் (செலவீனம்) செயலாளராகவும், குன்னூர் இண்ட்கோசெர்வ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராகவும் (பொறுப்பு), தமிழ் இணைய கல்வித்தளத்தின் இயக்குனராகவும் (பொறுப்பு) இருந்த டி.உதயச்சந்திரன், தமிழ்நாடு உப்புகழகத்தின் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனராக இருக்கும் சி.காமராஜ், அதே பணியில் தொடர்ந்து நீடிப்பார். தொழிற்சாலைகள் கமிஷனரும், தொழில்கள் மற்றும் வர்த்தக இயக்குனருமான அம்புஜ் சர்மா, குன்னூர் இண்ட்கோசெர்வ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

நிதித்துறையின் கூடுதல் செயலாளர் பி.உமாநாத், அந்தத் துறையின் (செலவீனங்கள்) செயலாளராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், தமிழ் இணைய கல்வித்தளத்தின் இயக்குனராக முழு கூடுதல் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷனின் செயலாளர் பி.ஜோதி நிர்மலா, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கூடுதல் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பட்டுக்கோட்டை துணை கலெக்டர் டி.எஸ்.ராஜசேகர், தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷனின் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொழிலாளர்கள் கமிஷனர் பி.அமுதா, தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உணவு பாதுகாப்பு கமிஷனராகவும் பி.அமுதா முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். வருவாய் நிர்வாக இணை கமிஷனர் எல்.சுப்பிரமணியன் தொழிலாளர்கள் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் முதன்மைச் செயலாளரும், அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனருமான (பொறுப்பு) பி.டபுள்யு.சி.தேவிதார், தமிழ்நாடு நகர நிதி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு நகர நிதி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எஸ்.ஸ்வர்னா, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (பயிற்சி) துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகவும், அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனராகவும் எஸ்.ஸ்வர்னா முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மைச் செயலாளர் பி.சிவசங்கரன், நகர நில உச்சவரம்பு மற்றும் நகர நில வரி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலன் மாநில கமிஷனர் கே.மணிவாசன், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். ஐ.சி.டி.எஸ். திட்ட இயக்குனராகவும் அவர் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். மாற்றுத்திறனாளிகள் நலன் மாநில கமிஷனராக நசிமுதீன் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் ஆர்.பழனிச்சாமி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். வேளாண்மை சந்தை, வேளாண் தொழில் கமிஷனர் மற்றும் தோட்டக்கலை, இடு பயிர்கள் இயக்குனர் (பொறுப்பு) ஷம்பு கலோலிகர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வேளாண்மை சந்தை, வேளாண் தொழில் கமிஷனர் மற்றும் தோட்டக்கலை, இடு பயிர்கள் இயக்குனர் ஆகிய பதவிகளில் ஷம்பு கலோலிகர் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

முதல் அமைச்சரின் செயலாளர்-2 ஷிவ்தாஸ் மீனா, பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் முதன்மைச் செயலாளராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu state government has transfer to 27 IAS officers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X