அதிர்ச்சி! பூட்டிய காரில் சிக்கிய 3 குழந்தைகள் பலி! மூச்சுத் திணறி பலியான சோகம்..! பெற்றோர்களே கவனம்
நெல்லை : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் விளையாட சென்ற 3 குழந்தைகள் மூச்சுத்திணறி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பில் பல நாட்கள் பயன்படுத்தப்படாமல் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது அந்த கார்களில் அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் விளையாட செல்வது வழக்கம்.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை 7 வயது குழந்தையான நித்திஷா , 4 வயது குழந்தைகளான நித்திஷ், மற்றும் கபிலன் ஆகியோர் அவ்வாறு அங்கு பல நாட்களாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் அருகே விளையாடியுள்ளனர்.

பழையா கார்
காரை சுற்றி விளையாண்டு கொண்டிருந்த குழந்தைகள் திடீரென அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவை திறந்து உள்ளே சென்று விளையாடியுள்ளனர். அப்போது கார் உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது . இது குறித்து தெரியாமல் உள்ளே இருந்த குழந்தைகளுக்கு சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. காரின் கதவை திறக்கும் மூடி சிறந்த குழந்தைகள் அலர் எடுத்து கூச்சல் போட்டுள்ளனர். ஆனால் அவர்களது அலறல் சத்தம் வெளியே இருந்த யாருக்கும் கேட்கவில்லை என கூறப்படுகிறது.

குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல்
இந்தநிலையில் விளையாடச் சென்ற குழந்தைகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவர்களை தேடி அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் அப்போது மூன்று பேரும் காருக்குள் மயங்கிக் கிடப்பது தெரியவந்துள்ளது மூன்று பேரையும் காரிலிருந்து மீட்கப்பட்ட நிலையில் இரு குழந்தைகள் மூச்சுத்திணறி காரணமாக அங்கேயே உயிரிழந்துள்ளனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்றொரு குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பெரும் சோகம்
காரில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளின் நிதிசார் மற்றும் நிதிச் ஆகியோர் உடன்பிறந்த அக்கா தம்பி என்பதும் மற்றொரு குழந்தை அவர்களது உறவினர் என்பது தெரியவந்துள்ளது. பூட்டப்பட்ட காருக்குள் 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பள்ளிகள் விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில் குழந்தைகள் எங்கே விளையாடுகிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் எனவும், நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களை முறையாக பூட்டி வைக்க வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications