சென்னையில் மேலும் 500 மி.மீ மழை பெய்யப்போகிறது.. பிபிசி லேட்டஸ்ட் எச்சரிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்தம்பித்தது சென்னை.. பல மணி நேரமாக புரட்டி அடித்த பேய் மழை.. வீடியோ

சென்னை: சென்னையில் மேலும் 500 மி.மீ அளவுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிபிசி எச்சரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ மழை பெய்யும் என முன்கூட்டியே கணித்தது பிபிசி. அதைப்போலவே பெருமழை கொட்டித் தீர்த்து நகரமே வெள்ளத்தில் மிதந்தது.

பல்வேறு உயிர்பலிகளும், பொருட்சேதங்களும் ஏற்பட அந்த பெரு வெள்ளம் காரணமாக இருந்தது. இதனால் பிபிசி வானிலை அறிக்கை முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.

நேற்று மாலையே எச்சரிக்கை

நேற்று மாலையே எச்சரிக்கை

இந்தநிலையில், பிபிசி வானிலை செய்திப்பிரிவு டிவிட்டரில் நேற்று மாலை ஒரு தகவலை வெளியிட்டது. அந்த தகவலில் இந்தியா மற்றும் இலங்கை: புதுச்சேரி, கேரளா, தமிழகம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சனிக்கிழமையளவில் கடலோர ஆந்திராவிலும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.

அபாய கட்ட வெள்ளம்

அபாய கட்ட வெள்ளம்

மற்றொரு டிவிட்டில் "தென்கிழக்கு இந்தியா மற்றும் இலங்கை: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம், அடுத்த சில நாட்களில் வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாயகட்ட, அளவுக்கு, மழையை கொண்டு வரும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

சொன்னதை போலவே

சொன்னதை போலவே

பிபிசி கூறியதை போலவே நேற்று வெள்ள அபாயம் ஏற்படும் அளவுக்கு சென்னையில் நேற்று இரவு மழை பெய்தது. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளது. நேற்று பிபிசி வெளியிட்ட டிவிட்டில் 500 மில்லி மீட்டர் அளவுக்கு (50 செ.மீ) மழை பெய்யலாம். இன்னும் வெள்ளத்திற்கு வாய்ப்புள்ளது. நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்பட்டிருந்தது.

இன்னும் 500 மி.மீ

இந்த நிலையில் இன்று காலை பிபிசி வானிலை செய்திப்பிரிவு தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: சென்னையில் ஏற்கனவே 200 மி.மீ மழை கடந்த 3 நாட்களில் பெய்துவிட்டது. 300-500 மி.மீ மழை வரும் சில நாட்களில் பெய்ய கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் அதிகபட்சம் 500 செ.மீ மழை சென்னையில் பெய்யக்கூடும் என பிபிசி கூறியுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டிய சூழலை காட்டுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai has already seen over 200mm in past 3 days. 300-500mm more rain possible in next few days, says BBC.
Please Wait while comments are loading...