தமிழகத்தில் 32 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்.. டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 32 டிஎஸ்பிக்கள் மற்றும் உதவிஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டிஜிபி ராஜேந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வடபழனி உதவி ஆணையராக ஜி.சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.வண்டலூர் டிஎஸ்பியாக அண்ணாதுரையை நியமித்து டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

32 DSPs and Assistant Commissioners have been transferred in Tamil Nadu

லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்.பி., விஸ்வேஸ்வரய்யா, மயிலாப்பூர் சரக துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி ராஜேந்திர குமார், அதே பிரிவில் துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எஸ்பி சிஐடி டிஎஸ்பி கவிகுமார், ராயப்பேட்டை சரக துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். வண்டலூர் டிஎஸ்பி முகிலன் காஞ்சிபுரம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பக டிஎஸ்பி ஜான் சுந்தர், கோயம்பேடு சரக துணை கமிஷனராக நியமித்து டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
32 DSPs and Assistant Commissioners have been transferred in Tamil Nadu. DGP Rajendran has issued this order.
Please Wait while comments are loading...