For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் திண்ணை... "இந்திய ஜனநாயகம்" வேற.. "இந்திய டெமாக்ரசி" வேற பாஸ்..!

Google Oneindia Tamil News

சென்னை: 2011 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் பட்டியலைப் பார்த்தால் சில சுவாரஸ்யங்கள் கண்ணில் படும். எத்தனை கட்சிகள், எத்தனை எத்தனை வேட்பாளர்கள்.

இப்போதெல்லாம் தேர்தலில் வெற்றி பெறுவதை விட போட்டியிட்டு பப்ளிசிட்டி தேடிக் கொள்வோர்தான் அதிகமாகி விட்டனர்.

தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்களை விட தோல்வியுற்று சாதனை படைத்தவர்களே நமது நாட்டில் அதிகம். அதிலும் கின்னஸ் சாதனை படைத்தவர் நமது தமிழகத்திலேயே இருக்கிறார்.

மொத்தம் 49

மொத்தம் 49

கடந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 49 கட்சிகள் போட்டியிட்டன. இதில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் என்று பார்த்தால் 16 மட்டுமே.

ஸ்வீட் 16

ஸ்வீட் 16

அந்த ஸ்வீட் 16 கட்சிகளில் மாநிலக் கட்சிகளை விட தேசியக் கட்சிகளே அதிகம். என்ன காமெடி என்றால் இந்த தேசியக் கட்சிகளுக்கு தமிழகத்தில் அந்த அளவுக்கு பலம் இல்லை என்பதுதான்.

தேசிய கட்சிகள்

தேசிய கட்சிகள்

பகுஜன் சமாஜ் கட்சி, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், பாஜக ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் ஆகும்.

மாநில கட்சிகள்

மாநில கட்சிகள்

அதிமுக, திமுக, பாமக ஆகியவை தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளாக கடந்த தேர்தலில் களம் கண்டவை ஆகும்.

நீங்க நினைச்சது சரிதான்!

நீங்க நினைச்சது சரிதான்!

அப்ப தேமுதிக..? இப்படி நீங்க நினைச்சது சரிதான். தேமுதிக கடந்த தேர்தலில் அங்கீகரிக்கப்படாத மாநிலக் கட்சியாகவே போட்டியிட்டது. ஆனால் எதிர்க்கட்சியாகி விட்டது.

இவர்களும் போட்டியிட்டார்கள்

இவர்களும் போட்டியிட்டார்கள்

அகில இந்திய பார்வர்ட் பிளாக், ஐக்கிய ஜனதாதளம், ஜம்மு காஷ்மீர் தேசிய பாந்தர்ஸ் பார்ட்டி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, லோக் ஜன சக்தி, ராஷ்டிரிய ஜனதாதளம், புரட்சிகர சோசலிச கட்சி, சிவசேனா ஆகியவை வெளி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் வரிசையில் இங்கு வந்து போட்டியிட்டு டெபாசிட்டைப் பறி கொடுத்த கட்சிகள்.

இவர்களும்

இவர்களும்

இவர்கள் மட்டுமா.. அனைத்திந்திய திராவிடர் சமுதாய முன்னேற்றக் கழகம், அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி, தேமுதிக, இந்தியன் டெமாக்ரடிக் பார்ட்டி, இந்திய ஜனநாயக கட்சி உள்பட அங்கீகரிக்கப்படாத கட்சிகளும் களம் கண்டிருந்தன.

டெபாசிட் போனதுதான் அதிகம்

டெபாசிட் போனதுதான் அதிகம்

இத்தனை கட்சிகள் சார்பிலும், சுயேச்சைகளாகவும் மொத்தம் 2748 பேர் போட்டியிட்டனர். இதில் வென்ற 234 பேரைத் தவிர 2270 பேருக்கு டெபாசிட் மீண்டும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
49 parties had contested in 2011 elections in Tamil Nadu and among them only 16 were recognised parties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X