தமிழகத்தில் 5 பேரை காவு வாங்கிய மழை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பக்கிங்காம் நிரம்பியது | தமிழகத்தில் 5 பேரை காவு வாங்கிய மழை- வீடியோ

  சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இடி, மின்னல் தாக்கியும், வீட்டுச் சுவர் இடிந்தும் 5 பேர் பலியாகினர்.

  வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு பொய்த்த நிலையில் இந்த ஆண்டு வெளுத்து வாங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் இரு நாள்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  5 were died in Heavy rain in various cases in TN

  தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பரவலாக இடி மின்னலுடன் நல்ல மழை பெய்தது. இதனால் சென்னை அனகாபுதூரைச் சேர்ந்த லோகேஷ்,19, கிஷோர் ,17 ஆகிய இருவரும் இடிதாக்கி உயிரிழந்தனர்.

  மேலும் நாகை மாவட்டம், சீர்காழியில் உள்ள பெருமங்களத்தில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் ராமசந்திரன் உயிரிழந்தார்.

  ஆரணியை அடுத்த லாடப்பாடியில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து நித்யாவும் ,14, கடலூர் மாவட்டம் பில்லாலித்தொட்டியில் சுவர் இடிந்து விழுந்து லதா என்பவரும் உயிரிழந்தார்.

  ஆரம்பத்திலேயே 5 உயிர்களை மழை காவு வாங்கிவிட்டதால் இன்னும் தீவிர மழை என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நிலைமை என்னவாகும் என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Heavy rain lashes in Tamilnadu. One Farmer including 3 were died by lightning and thunder. Two were died after house collapses.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற