காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தல்... விருதுநகரில் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தீக்குளித்த வைகோ உறவினர் சரவணன் சுரேஷ்

  விருதுநகர்: விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கம் அருகே சுரேஷ் என்பவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து 50 வயது சுரேஷ் தீக்குளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சாலை, ரயில் மறியல், உண்ணாவிரதம் என்று பலகட்ட எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிலர் உணர்ச்சிப் பெருக்கில் தீக்குளித்து தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

  50 years man sets self immolation seeking CMB at Virudhunagar hospitalised

  விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே சுரேஷ் என்பவர் இன்று காலையில் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டியை சேர்ந்த 50 வயது சுரேஷ் என்பவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து சுரேஷ் தீக்குளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 80 சதவீத தீக்காயங்களுடன் சுரேஷ் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  50 years Suresh sets self immolation seeking Cauvery management board at Virudhunagar hospitalised with 80 percentage of fire burns.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற