For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவுடன் கூட்டணிக்கு 60%; வைகோ அணி கூட்டணிக்கு 6% தேமுதிக தொண்டர்கள் ஆதரவு- நக்கீரன் சர்வே

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க 60% பேரும் மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைக்க 6% தேமுதிக தொண்டர்களும் விருப்பம் தெரிவித்துள்ளதாக நக்கீரன் இதழ் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிகவின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த வாரம் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேமுதிக பொதுக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் 2,000 பேரிடம் நக்கீரன் ஒரு கருத்து கணிப்பை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தாக்கும் பிடிக்கும் பலம்?

தாக்கும் பிடிக்கும் பலம்?

பெரிய கட்சிகளை எதிர்த்து தாக்கு பிடிக்கும் தேமுதிகவின் பலம் எது என்ற கேள்விக்கு விசுவாச தொண்டர்கள் என 47% பதிலளித்துள்ளனர். விஜயகாந்த்தின் அணுகுமுறை காரணம் என 34% ; மாற்றத்தை விரும்பும் மக்கள் என 19% கூறியுள்ளனர்.

முதன்மை அரசியல் எதிரி?

முதன்மை அரசியல் எதிரி?

தேமுதிகவின் முதன்மை அரசியல் எதிரி யார் என்ற கேள்விக்கு அதிமுக என 68% பேர் தெரிவித்துள்ளனர். திமுக 15%; பாமக 12%; இதர கட்சிகள் 2%; யாரும் இல்லை என 3% பேர் கூறியுள்ளனர்.

யாருடன் கூட்டணி?

யாருடன் கூட்டணி?

சட்டசபை தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கேள்விக்கு 60% திமுகவுடன் என பதிலளித்துள்ளனர். தனித்தே போட்டி என 20%; பாஜகவுடன் என 4%; மக்கள் நலக் கூட்டணியுடன் என 6% பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர். கேப்டனின் முடிவு என 10% பேர் கூறியுள்ளனர்.

மேலும் மக்கள் நலக் கூட்டணி ஒரு பெரிய சுமை. அதை சுமக்க எங்களால் முடியாது என்றும் தேமுதிகவினர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

எந்த அடிப்படையில் கூட்டணி?

எந்த அடிப்படையில் கூட்டணி?

எந்த அடிப்படையில் கூட்டணி அமைய வேண்டும் என்ற கேள்விக்கு ஆட்சியில் பங்கு என 34%; கேப்டன்தான் முதல்வர் - 31% என கூறியுள்ளனர். அதே நேரத்தில் ஜெ. ஆட்சியை வீழ்த்தினால் போதும் என 26% பேரும் அதிக சீட் என 9% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

English summary
According to Nakkheeran Magazine Survey, 60% DMDK cadres supported to DMK alliace; 6% only elected Vaiko lead PWF.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X