பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம் - தபெதிகவைச் சேர்ந்த 9 பேர் கைது
பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தைபெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 9 பேர் மீது வழக்கு பதிய செய்யப்பட்டுள்ளது.
சென்னை: பன்றிகளுக்கு பூணூல் அணிவித்து போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர்கழகத்தை சேர்ந்த 9 பேர் மீது மிருகவதைதடை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி அருகே பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்து இருந்தனர்.

இதனையடுத்து சமஸ்கிருத கல்லூரி முன்பு காலை முதலே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. ஆனால், போலீசாரின் கவனத்தை திசை திருப்பி, ராயப்பேட்டையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர்.
இதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த போலீசார், ராயப்பேட்டை அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், பன்றிகளைப் பிடிக்க மாநகராட்சி ஊழியர்களையும் வரவழைத்திருந்தனர்.

இந்நிலையில், ராயப்பேட்டை அஜந்தா பேருந்து நிறுத்தத்திற்கு 5 பன்றிக் குட்டிகளுடன் வந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வந்தனர்.
அவற்றுக்கு பட்டையடித்து, பூணூல் அணிவித்ததுடன், அவற்றின் வாய்களை கட்டி, சாலையில் தரதரவென்று இழுத்து வந்தனர்.
பன்றிகளின் வாயை மூடி, சுற்றி கயிரால் இருக்கி கட்டி, சாலையில் தரதரவென இழுத்து வந்தனர் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர். இதனையடுத்து போராட்டம் நடத்திய 9 பேர் மீது மிருகவதைதடை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications